
ஓட்டுநர்கள்
முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர்,
காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு
பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.
மேலும்
உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் இந்த மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர், மேலும்
இதில் பல்வேறு புதிய அப்டேட் வந்துகொண்டே தான் இருக்கிறது. அதன்படி தற்சமயம் இந்த
கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை வண்ணமயமாக அதிக தகவல்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள்
மேப்ஸ் ஆனது உலகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு, ஓரிடத்தின் இயற்கை
வண்ணத்தையும்,மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளையும் தேடுவோருக்குக்
காட்டினால் அது எவ்வளவு பயனுள்ளதாக அமையும் என்பதை சொல்லிதான் தெரிய வேண்டிய
அவசியமில்லை
ஒருவேளை புதிய பகுதி அல்லது ஒரு
நகரைப் பற்றி நீங்கள் அறிய வேண்டும் என்றால் கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்தும்
போது, அது மேலும் வண்ணமயமாக, அந்தப் பகுதி எவ்வாறு இருக்கும் என்பதை காட்டுவதாக
இருக்கும். இது இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன்படி
இயற்கை வளங்கள், கட்டடமைப்புக்கள் அனைத்தையும் கூகுள் வரைபடத்தில் விரிவுபடுத்தி
பார்க்கும் வசதி மூலம் பெறலாம் என்று கூகுள் வரைபடத்தின் திட்ட மேலாளர் சுஜோய்
பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சுருக்கமாக
கூறவேண்டும் என்றால் கூகுள் தனது புதிய வண்ண மேப்பிங் வழிமுறை வெவ்வேறு
நிலப்பரப்புகள் மற்றும் அடர்ந்த காடுகள் மற்றும் பனி சிகரங்கள் அல்லது பசுமையான
வயல்கள் மற்றும் மணல் கடற்கரைகள் போன்ற நிலங்களை வேறுபடுத்தி காண்பிப்பதை
எளிதாக்குகிறது என்றுதான் கூறவேண்டும்.
அதுமட்டுமல்லாமல்,
ஓரிடத்தின் துல்லியமான வடிவமைப்பு மற்றும் சலையின் அளவையும் துல்லியமாக அளகிகும்
வகையில் கூகுள் வரைபடத்தை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. அதாவது நடைபாதைகள், பாதசாரிகள் நடக்கும் இடங்கள், சாலைகள்
மற்றும் குறுக்குவழிகள் ஆகியவற்றையும் காண்பிக்கும். புதிய வடிவமைப்பு சாலைகளின்
அகலத்தையும் வடிவத்தையும் துல்லியமாகக் காட்ட முடியும்.
விரைவில்
அறிமுகப்படுத்தப்படும் புதுப்பிப்பில் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால்,
வரைபடங்கள் இப்போது சுற்றுச்சூழலில் உள்ள இயற்கை அம்சங்களை நன்றாக வேறுபடுத்தி
அடையாளம் காணும். "இயற்கை அம்சங்கள்" என்று நாம் கூறும்போது, பனிக்கட்டிகள், கடற்கரைகள், காடுகள் அல்லது பாலைவனங்கள்
அருகில் இருந்தால் காண்பிக்கும். வரைபடத்தின் இந்த புதிய பதிப்பு 220 நாடுகளில்
கிடைக்கும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக