>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 20 ஆகஸ்ட், 2020

    அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையா? – திறந்தநிலை பல்கலைகழக புதிய திட்டம்!


    தமிழக அரசு கல்லூரிகளில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்கல் விருப்பப்பட்ட கல்லூரிகளில் திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக விண்ணப்பித்து படிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதேசமயம் அரசு கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரிகளில் படிக்க இயலாமல் போகும் நிலை எழுந்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் மூலமாக விண்ணப்பித்து படிக்கலாம்.

    இதுகுறித்து பேசியுள்ள பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி ”தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகம் சார்பில் நடத்தப்படும் 130 பாடப்பிரிவுகள் சார்ந்த புத்தகங்களை தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களிலும் விற்பனைக்கு வைக்கவும், 50 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்களை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 32 மாவட்ட நூலகங்களிலும் மானவர்களுக்கு தேவையான புத்தகங்கள் படிப்பதற்கு தனியாக வைக்கப்படவும், விருப்பம் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
    .

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக