>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 12 பிப்ரவரி, 2020

    நேரமாச்சு... சிரிக்க ரெடியா இருக்கீங்களா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...!!

    பாபு : அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற?
    அருண் : ஹோட்டல்ல சர்க்கரை இல்லாத காபி குடிச்சிட்டு... பணம் கொடுக்குறப்போ சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
    பாபு : 😂😂
    -------------------------------------------------------------------------------------------------------------
    மனைவி : இன்னைக்கு நைட் சாப்பிட என்ன செய்யட்டும்?
    கணவன் : பருப்பும், சாதமும்...
    மனைவி : நேத்துதான அது சாப்பிட்டோம்...
    கணவன் : அப்போ கத்தரிக்காய் வறுவல்...
    மனைவி : பையனுக்கு அது பிடிக்காது...
    கணவன் : அப்போ பூரி செஞ்சிரு...
    மனைவி : மாவு இல்ல...
    கணவன் : முட்டைப் பொரியல் செஞ்சிரு...
    மனைவி : இன்னைக்கு வெள்ளிக்கிழமை...
    கணவன் : சரி.. நான் வேணா ஹோட்டல்ல போயி வாங்கிட்டு வரட்டுமா?
    மனைவி : கடை சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்காது..
    கணவன் : மோர்க் குழம்பு...
    மனைவி : வீட்டுல மோர் இல்ல...
    கணவன் : இட்லி சாம்பார்?
    மனைவி : நீங்க முன்னாடியே சொல்லியிருக்கணும்...
    கணவன் : அப்ப நூடுல்ஸ் பண்ணு... சீக்கிரம் செஞ்சிரலாம்...
    மனைவி : அது சாப்பிட்ட மாதிரியே இருக்காது... சீக்கிரம் பசி எடுத்துரும்..
    கணவன் : வேற என்னதான் சமைக்க போற?
    மனைவி : நீங்க என்ன சொல்றீங்களோ அதையே சமைக்கிறேன்...
    கணவன் : 😩😩
    -------------------------------------------------------------------------------------------------------------
    இது உண்மை தானே...!!
    எல்லோரும், எல்லா நேரங்களிலும்
    உங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்...
    ஏனென்றால் பலருக்கு பிறரை மதிக்க தெரியாமல் கூட இருக்கலாம்...

    எல்லோரும், எல்லா நேரங்களிலும்
    உங்களிடம் அன்பாக பழக வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்...
    ஏனென்றால் அவர்கள் சூழ்நிலை எப்படியோ?...

    ஆனால் நாம் எல்லோரையும், எப்போதும் மதிக்கலாம்...
    எல்லோரிடமும் எப்போதும் அன்பாக இருக்கலாம்...
    ஏனென்றால் நம் மனதிடம் நாம் என்ன வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக