கர்ப்பமாக இருந்த பெண் கொரில்லா குரங்கு உட்பட மிகவும்
அரிதான நான்கு கொரில்லாக்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துவிட்டதாக விலங்குகள் நல
அமைப்பு ஒன்று கூறுகிறது.
மூன்று
பெண் கொரில்லாக்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை கொரில்லா ஒன்றும் யுகாண்டாவின் தேசிய
பூங்கா ஒன்றில் உயிரிழந்தன. இந்த வகை கொரில்லாக்கள் எண்ணிக்கையில் மிக குறைவாக,
அதாவது 1000 கொரில்லாக்கள் மட்டுமே இருந்தன.
காங்கோ,
ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட இடங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே
இந்த கொரில்லாக்கள் வாழ்கின்றன. உயிரிழந்த 4 கொரில்லாக்களும் 17 கொரில்லாக்கள்
கொண்ட கூட்டத்தில் சுற்றி திரிந்தவை. இந்த கொரில்லா கூட்டத்திற்கு ஹிர்வா கூட்டம்
என தேசிய பூங்காவின் அதிகாரிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த
ஹிர்வா கொரில்லா கூட்டம் கடந்த ஆண்டு ருவாண்டா எல்லைப்பகுதியில் இருந்து
யுகான்டாவின் தேசிய பூங்காவிற்கு வந்து சேர்ந்தன. உயிரிழந்த மூன்று பெண்
கொரில்லாக்களும், அரிய வகை கொரில்லா இனத்தை பெருக்குவதில் முக்கிய பங்கு வகித்தன.
கொரில்லாக்களின் உயிரிழப்பு மிகுந்த வருத்தம் அளிப்பதாக மருத்துவர் செகுயா தெரிவித்தார்.
எனவே
அந்த ஹிர்வே கூட்டத்தில் மீதமுள்ள 13 கொரில்லாக்களையும் கண்டுபிடித்து,
ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் செகுயா பிபிசியிடம்
தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக