>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 2 ஜனவரி, 2020

    இதற்கு இதுதான் அர்த்தமா?... காத்துக்கொண்டிருக்கிறது... படிச்சு பாருங்க...! சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

    பாபு : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் 3வது மாடியிலே திருட்டுப் போச்சு... நேத்து ரெண்டாவது மாடியிலே.
    ராஜ் : அப்போ திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
    பாபு : 😂😂
    ------------------------------------------------------------------------------------------------
    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...!!

    தன் சட்டைப் பையினுள் இருந்து அழகான புதிய செல்போனை எடுத்த அந்த இளைஞன், கடற்கரையில் அமர்ந்திருந்த காதலியிடம் நீட்டி சொன்னான்.

    அன்பே...💕 இந்த செல்போன் உனக்குதான்... வைத்துக்கொள்.

    பளபளப்பான அந்த செல்போனை வைத்த கண்😍 வாங்காமல் பார்த்த காதலி அவனிடம் கேட்டாள்.

    இது எனக்குதானா? என் மீது இவ்வளவு அன்பா? விலை அதிகமாக இருக்குமே! எங்கே வாங்குனீங்க?

    காதலன் சிரித்துக்கொண்டே 😄 பதிலளித்தான் இது வாங்கியதில்லை. ஓட்டப்பந்தயத்தில் பரிசாகக் கிடைத்தது.

    தன் காதலன் ஓட்டப்பந்தய வீரன் என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாள்.

    ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் ஓடுனீங்க? டார்லிங்.😍😍

    காதலன் பெருமையாகச் சொன்னான்.😌😌

    மூன்று பேர். நான்🙋‍️ செல்போன் கடைக்காரன்📱 ஒரு போலீஸ்👮.
    ------------------------------------------------------------------------------------------------
    என்ன வித்தியாசம்?

    வெயில் காலத்திற்கும், பனிக்காலத்திற்கும் நூல் அளவுதான் வித்தியாசம்.

    எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்...

    ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனிக்காலம்...
    ------------------------------------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.

    பொருள் :

    பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
    ------------------------------------------------------------------------------------------------

    இது எப்படி இருக்கு...?

    1. கிணத்துல கல்லை போட்டா
    கல்லு ஏன் மூழ்குது?
    ஏன்னா அதுக்கு நீச்சல் தெரியாது.😌😜

    2. பொங்கலுக்கும், தீபாவளிக்கும் என்ன வித்தியாசம்?
    தீபாவளிக்கு பொங்கலை சாப்பிடலாம்...
    ஆனா, பொங்கலுக்கு தீபாவளிய சாப்பிட முடியாது.😌😜
    ------------------------------------------------------------------------------------------------
    இதற்கு இதுதான் அர்த்தமோ?

    நம்முடைய ஒவ்வொரு குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால்,
    நாம் புத்திசாலி என்றோ, இறைவன் இல்லை என்றோ அர்த்தம் இல்லை...
    நமக்கான தண்டனைகள் கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்...
    ------------------------------------------------------------------------------------------------

    இவை எதற்காக?
    தனிமைகள் கிடைப்பது உன்னை நீ தெரிந்துகொள்ள...

    தவறுகள் நடப்பது உன்னை நீ திருத்திக்கொள்ள..

    முயற்சிகள் எடுப்பது உன்னை நீ முன்னேற்றிக்கொள்ள...

    எதிரிகள் கிடைப்பது உன்னை நீ வளர்த்துக்கொள்ள...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக