Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஜனவரி, 2020

கோலம் போடுவதால் இவ்வளவு நன்மையா? தெரியாம போச்சே...!!

 Image result for கோலம் போடுவதில் இவ்வளவு நன்மையா?
கோலம் - இப்பெயரை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே விஷயம் எதுவென்றால் அது அழகுதான். ஆனால், அழகிற்காக மட்டும் கோலம் போடுகிறார்கள் என்றால் கிடையாது. பல மருத்துவக் காரணங்களுக்காகவும், காலம் காலமாக கடைபிடித்து வரும் சம்பிரதாயத்திற்காகவும் கோலம் போடுகிறார்கள். வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் :

காலையிலேயே குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலில் இருக்கும் இரத்த ஓட்டமானது சீராகிறது.

கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதோடு உங்கள் சிந்தனை சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும்.

மேலும் புள்ளிக்கோலத்தை போடும்;போது உங்களது கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும்.

பசு சாணத்தாலோ, தண்ணீராலோ வாசலை தெளிக்கும்போது, வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனால் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.

விரல்களால் கோல மாவை எடுத்து, வளைத்து கோலம் போடும்போது, அது நம் கைவிரல்களுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் நன்றாக வேலை செய்கின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

கோலம் போடுவதால் நம் கற்பனை திறனும், நினைவாற்றலும் வளர்கிறது.

அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து பார்க்க அழகாக இருக்கும்.

குனிந்து பெருக்குதல், குனிந்து கோலமிடுதல் இவையெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலை தரக்கூடியது.

கோலமிடுதல் என்பது வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம், மேலும் வீடு மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

தினமும் விடியற்காலையில் கோலம் போடுவதால் வீட்டிற்கு மட்டும் நன்மை கிடைப்பதில்லை. அதை போடும் பெண்களுக்கும் புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, உற்சாகம், செயலில் கவனம், பொறுமை, பிரச்சனைகளை கையாளும் திறன் ஆகியவையும் கிடைக்கப்பெறுகிறது.

கோலத்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அதனால் கோலம் போடுவதை ஒரு கடமையாக செய்யாமல் நமக்கும், இந்த பூமிக்கும் நன்மை கிடைக்கிறது என்ற நோக்கத்தோடு செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக