Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 டிசம்பர், 2019

ரஷ்யாவில் வெப்பம் தணிக்க செயற்கை பனிப்பொழிவு

1879ஆம் ஆண்டு முதல் மாஸ்கோவில் வானிலைப் பதிவுகள் பேணப்படுகின்றன. 1891ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா முழுவதும் அது விரிவுபடுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு ரஷ்யாவின் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாகக் கருதப்படுகிறது.

இது குறித்து அந்நாட்டு வானிலை சேவை மையத்தின் தலைவர் ரோமன் வில்பான்ட் கூறுகையில், "ரஷ்யாவில் வானிலைப் பதிவுகள் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை உள்ள காலத்தில் இந்த ஆண்டுதான் மிக அதிகமான வெப்பநிலை நிலவியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவின் சராசரி வெப்பநிலை 2019ஆம் ஆண்டில் 7.6 டிகிரி செல்சியஸ் முதல் 7.7 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. முந்தைய அதிகபட்ச வெப்பநிலையை விட இது 0.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். ஜனவரி மாதமும் ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகமாகவே இருக்கும் என ரோமன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக மாஸ்கோவில் டிசம்பர் மாதம் காணப்படும் பனிப்பொழிவு இந்த ஆண்டு இல்லை. வழக்கமாக மாஸ்கோவின் பனிக்கால திருவிழாக்கள் புத்தாண்டை ஒட்டி நடைபெறும். ஜனவரி முதல் வாரத்தில் இந்த திருவிழாக்களுக்குகாக கடந்த வாரம் செயற்கை பனிப்பொழிவை உருவாக்கும் ஏற்பாடு நடைபெறுகிறது. இதற்காக பனிச்சறுக்கு மைதானங்களிலிருந்து பனிக்கட்டிகளை அள்ளிவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மாஸ்கோவில் 1879ஆம் ஆண்டு முதல் வானிலைப் பதிவுகள் பேணப்படுகின்றன. 1891ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா முழுவதும் அது விரிவுபடுத்தப்பட்டது. புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை கூடிவருவது பற்றி ஐ.நா. சபை ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

2019ஆம் ஆண்டு நூற்றாண்டின் இரண்டாவது மிக வெப்பமான ஆண்டாக அமைக்கூடும் எனவும் அண்மையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் ஐ.நா. கூறியிருக்கிறது.

செர்பியாவிலும் கடந்த பத்தாண்டுகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதாலல் பனிப்பொழிவு குறைந்திருக்கிறது எனவும் பனிக்காலம் குறுகிவருகிறது எனவும் செர்பியா வானிலை சேவை மையத்தின் தலைவர் அன்னா லாப்சிக் கூறுகிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொடர்ந்து பருவநிலை மாற்றத்துக்கு மனிதச் செயல்பாடுகளை குற்றம்சாட்டி பேசிவருகிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என்னென்ன என்று யாருக்குமே தெரியாது எனக் கூறினார்.

ரஷ்யா உலகிலேயே மிக அதிக அளவுக்கு கார்பன் எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது எனவும் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பு ஆர்டிக் பெருங்கடல் பரப்பில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். ரஷ்யா வெப்பநிலை மற்ற நாடுகளைக் காட்டிலும் 2.5 சதவீதம் வேகமாக உயர்ந்துகொண்டிருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக