Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 டிசம்பர், 2019

புத்தாண்டு கொண்டாட்டம்: டாஸ்மாக் விற்பனை இலக்கு எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் குடிபிரியர்களின் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.

பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது போதைக்கு அடிமையாக்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே அரசு செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் குடிபிரியர்களின் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், அரசு இயந்திரம் அதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்றும் நாளையும் ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டாஸ்மாக் எலைட் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள 31 எலைட் மதுக்கடைகளில் பணியாற்றுவோருக்கு கோட் சூட் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தவிர பிற ஊர்களில் உள்ள 52 எலைட் மதுக்கடைகளிலும் பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக