Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஆதார் - பான் கார்டு இணைப்பு: மூன்று மாதம் அவகாசம்!

 


பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கால வரம்பு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. 
குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் ஆதார் பான் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு இன்றுதான் (டிசம்பர் 31) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 ஆனால் இணைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையாததாலும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததாலும், 2020 மார்ச் 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் பான் கார்டுகளும் ஆதார் கார்டுகளும் இன்னும் வந்துசேராத நிலையில் அவை இணைக்கப்படுவதற்கான காலக்கெடு போதுமானதாக இல்லை. மேலும், ஆதார் கார்டுகளில் திருத்தங்கள், தவறான விவரங்கள் போன்றவற்றைச் சீர்திருத்தம் செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. 
எனவே தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமான வரிச் சட்டம் 1961, உட்பிரிவு 139 ஏஏ-இன் கீழ் ஆதார் - பான் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
 
இணைப்பது எப்படி?

ஆன்லைன் மூலமாகவே ஆதார் கார்டு - பான் கார்டுகளை இணைக்கலாம். வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.htmlஎன்ற முகவரியில் வாடிக்கையாளர்களே ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். 
ஆதார் எண், பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம். ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து UIDPAN<12><10> என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். 
=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக