சிறுவன் காணவில்லை என பெற்றோர் அளித்த
புகாரின் பேரில் குற்றவாளியை பிடித்த போலீசார் கொலைக்கான காரணத்தை குறித்து
விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
அருகே உள்ள முத்துலாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ஜெய்சங்கர் -
ரேவதி. இவர்களுடைய 6 வயது மகன் நகுலன், அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு
படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அதன் பின்னர் சிறுவன் வீட்டுக்கு வராததால் அவனுடைய பெற்றோர் அப்பகுதியெங்கும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் நகுலனை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர்
எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அதே ஊரைச் சேர்ந்த
அருள்ராஜ் என்பது மீது சந்தேகம் இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம்
தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அருள்ராஜை
பிடித்து விசாரணை நடத்தியதில் சிறுவனை அடித்துக் கொலை செய்ததாகவும் உடலை எங்கு
வீசினேன் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். பின்னர் போலீசார் நடத்திய
கெடுபுடி விசாரணையில் குற்றவாளி அருள்ராஜ் அடையாளம் காட்டிய இடத்தில் சிறுவனின்
சடலத்தை மீட்கப்பட்டது.
மேலும், இந்த கொலை எதற்காக நடந்தது என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 வயது சிறுவனை இரக்கமின்றி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த கொலை எதற்காக நடந்தது என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 வயது சிறுவனை இரக்கமின்றி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக