டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிஜாமுதின் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார்.
ரயில் செல்லும் திசையில் இறங்காமல், நின்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்குவது போல நேராக இறங்க முயற்சி செய்ததால், நிலை தடுமாறிய அவர் ரயிலுக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் இடையில் சிக்கினார்.
இந்த கோர விபத்தில் அந்த இளம்பெண் தன் இரு கால்களை இழந்துள்ளதாகவும், பின்பு ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக