Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 16 நவம்பர், 2019

சில விஷயங்கள்... இப்படி இருப்பதால்தான் சிறப்பு பெறுகிறது... எதுவாக இருக்கும்?

Image result for ரிலாக்ஸ் ப்ளீஸ்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



சிரிக்க மட்டுமே..!!

ராமு : ஏம்பா இப்படி எல்லாமே தப்பா இருக்கு?.. எத்தனை விஷயத்தை நான் சரி செய்ய முடியும் சொல்லுங்க...
சோமு : எதுக்குடா இப்படி சலிச்சிக்குற?
ராமு : பின்ன என்னப்பா, குண்டூசி எவ்வளவு மெலிசா இருக்கு அதுக்கு போயி குண்டூசின்னு பேர் வச்சா எப்படி?
சோமு : 😑😑
---------------------------------------------------------------------------------------------------------------
அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம்...!!

👩 ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்துவிட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல... தொடர்ந்து 6 நாட்களாக படைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை, ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்? என்றது.

👩 அதற்கு கடவுள், இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து, உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றிற்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாதபோதும் அவளே அவளை குணப்படுத்தி கொண்டு, ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும்தான் இருக்கும், என்று விளக்கமாக சொன்னார். இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா? என்று ஆச்சரியப்பட்டது தேவதை.

👩 ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே? என்றது தேவதை. அதற்கு கடவுள், இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால், மனதளவில் ரொம்ப பலமானவள். அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்த படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப்படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் காட்டுவாள் என்றார்.

👩 ஓ... இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா? என்று தேவதை கேட்டது. எல்லா விஷயங்களையும் பற்றி யோசிக்க மட்டுமல்ல அவற்றிற்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும் என்று விவரித்தார் கடவுள். அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்துவிட்டு, இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே? என்றது. அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம்தான் கண்ணீர் என்று பதிலளித்தார் கடவுள். ஆச்சரியமான தேவதை, உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா? என்றது தேவதை. இத்தனை சிறப்புகள் தனக்குள் இருப்பதை உணராமல் இருப்பதுதான் அவளிடம் உள்ள ஒரே குறை என்றார் கடவுள்.
---------------------------------------------------------------------------------------------------------------
 
சில விஷயங்கள்... இப்படி இருப்பதாலேயே சிறப்பு பெறுகிறது...!!

எதையும் எதிர்பார்க்காத அன்பு...

தவறுகளை சுட்டிக்காட்டும் நட்பு...

எப்போதும் உறங்காத உண்மை...

முடியும் என ஊக்கம் தரும் முயற்சி...

நேர்மையாய் வாழ வைக்கும் நற்குணம்...

தோல்விகளை கண்டு துவளாத உழைப்பு...

அனைவரிடத்திலும் நீங்கள் காட்டும் பணிவு...

அவைகளை நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பு பெறும்...!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக