இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முட்டையை வேகவைக்கும்போது அதனுள் இருப்பவை
வெளியில் வராமல் இருப்பதற்கு, வேகவைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை
விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை
வெளியில் வராது.
பால்
புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும்போதே அதனுடன் சேர்க்கவும்.
அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு
அல்லது காரம் அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம். ஒரு தக்காளிப் பழத்தை சிறு
துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம்
சரியாகிவிடும்.
கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய்
வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் வாடாமலும்,
நிறம் மாறாமலும் இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில்
போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் பாதுகாக்கலாம்.
உப்பு
ஜாடியில் எப்போதும் தண்ணீர் வடிகிறதா? அதனைத் தவிர்க்க சிறு புளித்துண்டை எடுத்து
உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் நீர்த்தன்மையை புளி எடுத்துவிடும்.
அதிகப்படியாக வாங்கி வைத்திருக்கும் எண்ணெயில்
ஒரு சில பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால், எண்ணெய் கசடு தங்குவது நிகழாது.
வெண்டைக்காயை துணியால் சுற்றி அதனை பாலித்தீன்
கவரில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாது.
வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது, தோசை
இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு
ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
குக்கரில் பருப்பை சமைக்கும்போது, ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூளையும், ஒரு டீஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள்.
அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
வாழைத்தண்டுகள், கீரைகள் மற்றும் கொத்தமல்லி
இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப்
பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக
இருக்கும்.
வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை
சேர்த்தால் எளிதில் வதங்கிவிடும்.
வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு
பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக