கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
ஆசிரியர் : பசங்களா! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நம்ம உயிர் வாழ ரொம்ப தேவையான ஆக்ஸிஜனை நாம பிறக்கறதுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டாங்க.
மாணவன் : நல்லவேளை டீச்சர்! நான் அதுக்கப்புறம் பிறந்தேன். முன்னாடியே பிறந்திருந்தா ஆக்ஸிஜன் இல்லாம செத்துப் போயிருப்பேன்.
ஆசிரியர் : 😨😨
----------------------------------------------------------------
ஆசிரியர் : ஏன்டா.. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேத்து சொன்னீங்க... துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு, அதான்.
ஆசிரியர் : 😨😨
----------------------------------------------------------------
அண்ணன் : ரூமை மூடிக்கிட்டு ஏன் மருந்து சாப்பிடுற?
தம்பி : டாக்டர் தான் அரைமூடி மருந்து சாப்பிட சொன்னாரு.
அண்ணன் : 😂😂
----------------------------------------------------------------
மூளைக்கு வேலை..!!
🙌 பதினொன்றோடு இரண்டை சேர்த்தால் ஒன்றாகும். எப்படி?
🙌 எவ்வளவு முன்னேறுகின்றீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
🙌 தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகின்றேன். நான் யார்?
🙌 25-ஐ எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
🙌 இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
விடை :
👉 11 மணி நேரம் + 2 மணி நேரம் ஸ்ரீ 1 மணி
👣 கால் தடங்கள்
🚿 சோப்
😁 ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
😇 நினைவுகள்.
----------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
சிறந்த வரிகள்...!!
வாழ்க்கை தேடல்களுக்கான சிறந்த விடை
உன் அனுபவங்களால் உனக்கு கிடைக்கும்.
ஆதலால் எதையும் நேருக்கு நேர் சந்தித்துவிடு...
வெற்றி பெற்றால் சாதனையாகட்டும்...
தோல்வி அடைந்தால் ஒரு சிறந்த அனுபவமாகட்டும்...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக