Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

இதுஉண்மைதானா? படிச்சு பாருங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!
மகன் : அப்பா, தாத்தாவுக்கு ஏன் தலையில முடியே இல்ல?
அப்பா : அதுவா.. தாத்தா ரொம்ப பெரிய அறிவாளி. அதனாலதான்!
மகன் : ஓ.. இப்போதான் தெரியுது.. உங்களுக்கு ஏன் இவ்வளவு அடர்த்தியா முடி இருக்குன்னு?
அப்பா : 😓😓
-------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரம் மாதிரியே இருக்கு...
நோயாளி : நீங்க இப்போ பிடிச்சு பாக்குறதே என்னோட கடிகாரத்தைதான் டாக்டர்.
டாக்டர் : 😛😛
-------------------------------------------------------------------------------------------------

ராணி : உன் வீட்டு நாய்க்கு சோறு வைக்காம, எதிர் வீட்டு நாய்க்கு சோறு வைக்குறியே... ஏன்?
லதா : அதுதான் என் மாமியாரை கடிச்சுது..!!
ராணி : 😅😅
-------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கை...!!
வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள்.

நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை.

வாழ்வை அதன் போக்கில் விட்டு விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------
மனிதனை அழிக்கும் மூன்று விஷயங்கள்...!!
'நான்" என்கின்ற ஆணவம்...
'அவனா" என்ற பொறாமை...
'எனக்கு" என்கின்ற பேராசை...
இந்த மூன்று குணங்களும் மனிதனை நிம்மதியாக வாழவிடாது...
-------------------------------------------------------------------------------------------------
இது உண்மையா?
தவறுக்கு தனிகுணம் ஒன்று உண்டு...
தனக்கு என்றால் தவறு இல்லை என்று வாதாடச் சொல்லும்...
பிறருக்கு என்றால் ஊரறியத் தீர்ப்பு சொல்ல தோன்றும்..
-------------------------------------------------------------------------------------------------

யார் சாதிப்பார் தெரியுமா?
ஆரவாரமில்லாமல் ஓடும் நீரோடை தண்ணீர், தாகத்தை போக்கிவிடும்....
ஆரவாரம் கொண்ட கடல் நீரோ எதற்கும் உதவாது...
அதுபோலதான் அமைதி, பொறுமை கொண்ட மனிதன்
எதையும் சாதிப்பான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக