அம்மா! தங்கள் கட்டளையே நான் மறுப்பேனா? என் தம்பி பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வம் அல்லவா? தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தங்களால் எனக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆதலால் நான் இன்றே வனவாசம் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைப்பெற்று சென்றார்.
இராமன் தன்னை பெற்ற கௌசலையின் மாளிக்கைக்கு சென்றார். அங்கு தன் தாயின் காலடியில் பணிந்து விழுந்து வணங்கினார். கௌசலை, மகனே! 'நீடுடி வாழ்க" என்று வாழ்த்தினாள். இராமா உனக்கு பட்டாபிஷேகம் செய்ய நேரம் ஆகிவிட்டது அல்லவா? ஏன் இன்னும் தாமதிக்கிறார்கள். பரதன் வர வேண்டும், ஜனகர் வர வேண்டும் என்று தாமதிக்கிறார்களா? என்று கேட்டாள். இராமர், அம்மா! இந்த நாட்டை பரதன் ஆட்சி புரிய வேண்டும் என்று தந்தை கட்டளையிட்டுருக்கின்றார் என்றார். இதை கேட்ட கௌசலை மகிழ்ச்சி அடைந்தாள். ராஜ குலத்தில் மூத்தவனுக்கு தானே முடிசூட்ட வேண்டும். மூத்தவன் நீ இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவது முறையற்றது. இருந்தாலும் பரதன் உன்னை விட சிறந்தவன். பரதன் ஆட்சி புரிந்தால் நாட்டுக்கு நலம் தான். நீ நாட்டின் நலனுக்காக பாடுபடலாம் என்றாள். அம்மா! தந்தையின் கட்டளை இன்னொன்றும் உள்ளது. தங்கள் மகனாகிய நான் பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல வேண்டும். இது தந்தையின் கட்டளை ஆகும். ஆதலால் நான் வனவாசம் செல்கிறேன் என்றார்.
இதைக் கேட்ட கௌசலை, மகனே! என்று நிலை தடுமாறி கீழே விழுந்தாள். அவள் வேதனையால் துடிதுடித்து போனாள். தான் போக இருந்த கானகத்திருக்கு உன்னை செல்லச் சொல்லி உன் தந்தை கட்டளையிட்டாரா? நீ செல்கின்ற கானகத்துக்கு உன்னுடன் நானும் வருவேன் என்று கூறி புலம்பி அழுதாள். அம்மா! தந்தையின் சொல் எனக்கு வேத மந்திரம் ஆகும். நான் கானகம் செல்லவில்லை என்றால் தந்தையின் வாய்மை பொய் ஆகிவிடும். தாங்கள் தந்தைக்கு உதவியாக இங்கேயே இருக்க வேண்டும் என்றார். தாயே நான் கானகம் செல்ல தாங்கள் மனமார ஆசி கூறி விடை கொடுங்கள் என்றார். என் ஆருயிர் மகனே! ஒரு தாய் மகனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியவில்லை என்று நான் துன்பப்படுகிறேன். உனக்கு நான் தருமம் என்னும் அமுதை தருகிறேன். மகனே! நீ அறநெறியில் வழுவாமல் இருக்க வேண்டும் இராமா. அங்கு உனக்கு விலங்களும், பறவைகளும் உதவி செய்யும். நீ செல்ல இருக்கும் கானகத்தில் மரங்களும், பழுத்த பழங்களும் உனக்கு உதவும். நீ செல்லுகின்ற கானகம் வெப்பம் தணிந்து குளிர்ந்து உனக்கு நலம் புரிய வேண்டும் என்று ஆசி கூறினாள்.
இராமர் சுமித்திரையின் மாளிகைக்கு சென்றார். இராமன் கானகம் போகாவண்ணம் தடுத்து நிறுத்த தசரதரிடன் அனுமதி கேட்கலாம் என்று எண்ணி கைகெயின் மாளிகைக்குச் சென்றாள். அங்கு மன்னர் இருக்கும் நிலையை கண்டு நீங்கா துயரில் மூழ்கினாள். மன்னவரின் பாதங்களை பற்றி வாய்விட்டு புலம்பி அழுதாள். அக்குரலை கேட்ட வசிஷ்டர் கைகெயின் மாளிக்கைக்கு சென்றார். அங்கு மன்னரின் நிலையை கண்டு இங்கு என்ன நடந்தது என்று கைகெயிடம் கேட்டார்.
வசிஷ்டரிடம் கைகெயி மன்னர் தனக்கு இரண்டு வரங்கள் அளித்ததையும், அவ்விரண்டு வரங்களையும் மன்னர் நிறைவேற்றியதை பற்றியும் கூறினாள். அவ்விரண்டு வரங்கள் என்னென்ன என்பதை பற்றியும் கூறினாள். வரத்தை கொடுத்துவிட்டு இப்போது துன்பப்படுகிறார். அம்மா! தசரத சக்கரவர்த்தி வரம் கொடுத்தது கொடுத்தது தான். ஆனால் தங்களின் குலகுருவாகிய நான் தங்களிடன் ஒரு வரத்தை கேட்கிறேன். பரதன் முடி சூட்டி கொண்டு ஆட்சிபுரிய வேண்டும். இராமன் வனவாசம் போகாமல் அயோத்தியில் ஒரு தவச்சாலையில் இருக்க வேண்டும். இந்த வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும் என்றார்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக