>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 7 ஏப்ரல், 2020

    நீங்கள் ஆறா? இல்லை சிற்றோடையா? யோசித்து பாருங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    இது சிரிப்பதற்கான நேரம்...!!
    ராணி : ஹலோ... அறிவழகியா?
    ஜானகி : இல்ல... நா அவங்க அம்மா பேசுறேன்...
    ராணி : அறிவு இருந்தா அவக்கிட்ட போன கொடுங்க...
    ஜானகி : 😳😳
    ------------------------------------------------------------
    அப்பா : ஏன்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே... என்னாச்சு?
    மகன் : அட அத ஏன்பா கேக்குறீங்க...?
    அப்பா : ஏன்டா?
    மகன் : எல்லோரும் என்ன பாத்து பயந்துக்கிட்டு முன்னாடியே போயிட்டாங்க...
    அப்பா : 😂😂
    ------------------------------------------------------------
    குட்டி பொண்ணு : அணிலுக்கும், ஆமைக்கும் லெட்டர் போட்டா மொதல்ல எதுக்கு போயி சேரும்?
    ராதிகா : தெரியலையே பாப்பா...
    குட்டி பொண்ணு : அணிலுக்குத்தான்...
    ராதிகா : ஏன்?
    குட்டி பொண்ணு : ஏன்னா அதுக்குத்தான் பின்கோடு இருக்கே...
    ராதிகா : 😏😏
    ------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    எந்த பறவை தனியாக பறக்கின்றதோ அதற்குதான்
    மிக வலுவான சிறகுகள் இருக்கும்.
    எனவே உலகமே எதிர்த்து நின்றாலும்
    உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள்...
    ------------------------------------------------------------
    இது உண்மையா?

    பணக்காரன் ஏழை வீட்டிற்கு சென்றால் உபசரிப்பு பலமாக இருக்கும்!

    ஏழை பணக்காரன் வீட்டிற்கு சென்றால் உபதேசம் மட்டுமே இருக்கும்!
    ------------------------------------------------------------
    இதில் நீங்கள் யார்?

    சிற்றோடைகள் மலைகளில் மோதியும்,
    பிளவில் விழுந்தும் பெருஞ்சத்தத்தை எழுப்பும்...

    ஆறோ அமைதியாகப் பயணிக்கும்...
    முட்டாள் சிற்றோடையை போன்றவன்
    ஆனால் அறிவுடையவன் அமைதியான
    நதியைப் போன்றவன்!!
    ------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.

    விளக்கம் :

    வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவருக்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களை சொல்லுதல் ஆகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக