>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 6 ஜனவரி, 2020

    இதுதான் வலிமை மிக்க ஆயுதம்.. எப்பொழுதும் கைவிடாதீர்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    தெறிக்கும் ஜோக்ஸ்..!
    பாபு : இன்னைக்கு ஏன்டா ஸ்கூலுக்கு சாக்குப்பைய எடுத்துட்டு வர்ற?
    ராமு : நான் நாளைக்கு லீவு டா அதான்...
    பாபு : அதுக்கு எதுக்கு சாக்குப்பை?
    ராமு : நீதானடா சொன்ன, ஸ்கூலுக்கு லீவு போடணும்னா ஏதாவது சாக்கு வேணும்னு... அதான்.
    பாபு : 😆😆
    -------------------------------------------------------------------------------------------------------
    மனைவி : ஏங்க...? காதல் கவிதை எல்லாம் நிறைய எழுதுறீங்களே.. நீங்க யாருக்கிட்டயாவது ஏமாந்துட்டீங்களா? இல்ல காதல் தோல்வியா?
    கணவன் : இல்லடி!
    மனைவி : பின்ன...
    கணவன் : உன்னக் கட்டிக்கிட்டேனே அதான்... கல்யாணத் தோல்வி!!
    மனைவி : 😡😡
    -------------------------------------------------------------------------------------------------------

    சிறந்த வரிகள்...!!
    ஆயிரம் தோல்விகளை நீங்கள் ஒரு விஷயத்தில் அடைந்தாலும்,
    சற்றும் சலிக்காத போராட்ட குணம் ஒன்று உங்களிடத்தில்
    இருக்கும் பட்சத்தில், உங்களைப் போன்ற வெற்றியாளர்கள்
    இந்த உலகத்தில் யாரும் இல்லை...
    -------------------------------------------------------------------------------------------------------
    இது எப்படி இருக்கு...?
    வலிமை மிக்க ஆயுதம் - புன்னகையுடன் கூடிய மௌனம்...
    தோல்வியே இல்லாத ஆயுதம் - பொறுமை..
    மிகப்பெரிய நன்மை - பிறருக்கு உதவுதல்...
    மிகப்பெரிய செல்வம் - தர்மம்...
    -------------------------------------------------------------------------------------------------------

    ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்கு கோபம்...!!
    நாம் அறிந்த விளக்கம் :

    கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும்போது அவனையும், மாட்டையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாங்காமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் கோபித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல்படுவது ஏர்தான். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது.

    விளக்கம் :

    ஒரு செயலை செய்யும்போது அது ஒரு சாரருக்கு சந்தோஷத்தை கொடுக்கும், மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும், இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள், தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவதுதான் இங்கே செயல், ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம், நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக