ஆப்பிள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது.
அதிக ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் ஆப்பிள் ஒன்று. இந்த ஆப்பிளை வைத்து வீட்டிலேயே ஈஸியாக ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் - 2
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
தண்ணீர் - அரை கப்
செய்முறை :
ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய ஆப்பிளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும்.
சர்க்கரைப் பாகு ரெடியானதும், அதில் அரைத்து வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கெட்டியானதும், அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, காற்றுப் புகாத பாட்டிலில் வைக்க வேண்டும். இப்போது சுவையான ஆப்பிள் ஜாம் ரெடி!!!
ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும்போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு சேர்ப்பது ஆப்பிள் ஜாம் கெட்டு போகாமல் இருப்பதற்கு மட்டுமே எனவே சரியான அளவில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக