திருச்சியிலிருந்து ஏறத்தாழ 19கி.மீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து ஏறத்தாழ 8கி.மீ தொலைவிலும் இயற்கையான சூழலில் அழகாக காட்சியளிக்கும் விதத்தில் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது.
சிறப்புகள் :
ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா என்று இந்தப் பூங்கா விளங்குகிறது.
இந்தப் பூங்காவின் வடக்கில் கொள்ளிடம் ஆறு, தெற்கில் காவிரி ஆறு இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு சேர்க்கும் விதமாக பூங்காவின் உட்புறத்தில் நம் கண்களை கவரும் வகையில் வண்ண வண்ண செடிகள், அழகிய புல்தரைகள், பல மரங்கள் அமைந்துள்ளன.
இங்கு விதவிதமான வண்ணத்துப்பூச்சிகள் இருக்கிறது. மேலும் வண்ணத்துப்பூச்சியின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழலும் இந்த பூங்காவில் அமைந்திருப்பதை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
இங்கு சிறுவர், சிறுமியர் விளையாடுவதற்கு தனிப்பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஊஞ்சல், சறுக்கு ஏணி, ராட்டினங்கள் உள்ளிட்டவைகளும் அமைந்துள்ளன.
குடும்பத்துடன் ஆனந்தமாய் கண்டு ரசிப்பதற்கு செயற்கையான வடிவத்தில் பட்டாம் பூச்சிகள் அமைந்துள்ளது. மேலும் படக்குளம், கல்மரத்தில் வண்டுகள், வெட்டுக்கிளி அமர்ந்திருப்பது போன்று செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன.
வண்ணத்துப்பூச்சி பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்கு அழகிய நடைபாதைகளும், தொங்கு பாலமும் உள்ளன.
இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறுவதற்கு குடில்கள், நிழற்குடைகள் போன்றவை அமைந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவினுள் செல்லும் போது வாசனை திரவியத்தை உடம்பின் மேலே தெளித்துக் கொண்டு போக வேண்டும். அப்படிச் சென்றால் பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சிகள் அவர்கள் மீது அமர்ந்துக் கொள்ளும் காட்சிகளை புகைப்படம் பிடித்துக் கொள்ளலாம்.
எப்படி செல்வது?
திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக