Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஜனவரி, 2020

யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?

 Image result for யாருக்கு என்ன யோகம்? என்ன பலன்?
 பிரம்மா யோகம் :

 குரு, சுக்கிரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது பத்தாம் வீட்டிலோ அமர்ந்தால் உண்டாவது பிரம்மா யோகம் ஆகும்.

 பிரம்மா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 கல்வியில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.

 நீண்ட ஆயுள் உடையவர்கள்.

 எல்லோராலும் மதிக்கப்படும் கீர்த்தி உடையவர்கள்.

 பெருமையாவும் அடையக் கூடியவர்கள்.

 வசீகர யோகம் :

 புதன், சுக்கிரன் மற்றும் சனி மூவரும் ஒரே வீட்டில் கூடி நின்றால் அமைவது வசீகர யோகம் ஆகும்.

 வசீகர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 எழில் உடையவர்கள்.

 அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர்கள்.

 காம யோகம் :

 ஏழாம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், எழில் சுபர் பார்வை அமைவதும் உண்டாவது காம யோகம் ஆகும்.

 காம யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 நல்ல இல்வாழ்க்கை துணைவி அமையும்.

 எதிர்பார்த்த இல்வாழ்க்கை நல்ல முறையில் அமையும்.

 கௌரி யோகம் :

 லக்னத்திற்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் உள்ள கிரகம் உச்சம் பெற்று லக்னாதிபதியுடன் இணைந்திருக்க அமைவது கௌரி யோகம் ஆகும்.

 கௌரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 நல்ல சிந்தனைகள் உடையவர்கள்.

 செல்வ வளம் உடையவர்கள்.

 கீர்த்தி உடன் வாழக்கூடியவர்கள்.

 மாருத யோகம் :

 மூன்று, ஆறு மற்றும் பதினொன்றாம் அதிபதிகள் ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு உடன் இணைந்து இருக்கும் போது சுபர் பார்வை பெற்றின் உண்டாவது மாருத யோகம் ஆகும்.

 மாருத யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையும்.

 சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

 சுமத்திர யோகம் :

 லக்னத்தில் கேது அமர்ந்து ஏழாம் வீட்டில் மதி இருக்க மதிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் இருக்க உண்டாவது சுமத்திர யோகம் ஆகும்.

 சுமத்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 சிறு பகுதிகளுக்கு உயர் அதிகாரியாக அமையும் வாய்ப்புகள் உண்டாகும்.

 அசுபர யோகம் :

 லக்னத்தில் குருவும் மற்றும் சந்திரனும் இணைந்து இருந்து லக்னாதிபதி சுபருடன் இணைந்து இருக்க உருவாவது அசுபர யோகம் ஆகும்.

 அசுபர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 அரசியலில் அதிகார பதவி உண்டாகும்.

 அதிர்ஷ்டம் உண்டாகும்.

 யௌவன யோகம் :

 லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சுப கிரகம் இருந்து இரண்டாம் அதிபதிக்கு உரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் அமைவது யௌவன யோகம் ஆகும்.

 யௌவன யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 கல்வி ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

 சுகபோக வாழ்க்கை பெற்று வாழ்வார்கள்.

 சாமர யோகம் :

 குரு கேந்திர இடங்களில் இருந்து லக்னம் சர லக்னமாக இருக்க லக்னாதிபதி மறைவு வீடுகளில் அமைவதால் ஏற்படுவது சாமர யோகம் உண்டாகும்.

 சாமர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 தீர்க்க ஆயுள் பெற்று வாழ்வார்கள்.

 செல்வ வளம் உண்டாகும்.

 செல்வாக்கு பலம் உயரும்.

 நாக யோகம் :

 ஒன்பதாம் வீட்டில் குருவும் ஒன்பதுக்கு உரியவர் ஏழிலும் இருக்க சந்திரன் சுபர்களுடன் இணைவு அல்லது சுபர் பார்வை பெற அமைவது நாக யோகம் ஆகும்.

 நாக யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 உயர் கல்வியில் விருப்பம் உடையவர்கள்.

 சகல வசதிகளுடன் வாழக்கூடியவர்கள்.

 சுலபமாக சம்பாதிக்கும் யோகம் :

 லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது.

 சுலபமாக சம்பாதிக்கும் யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 உழைப்பு இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட கூடியவர்கள்.

 அவயோக காலசர்ப்ப யோகம் :

 கேந்திர வீடுகளில் ராகு மற்றும் கேது அமைய அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது.

 அவயோக காலசர்ப்ப யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 ஏற்ற தாழ்வுகளை கொண்ட வாழ்க்கை முறையை உடையவர்கள்.

 விபத்து போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.

 வெளிநாடு செல்லும் யோகம் :

 ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள் கடகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வீடுகளில் இடம் பெற்றோ அல்லது ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள் பலம் பெற்று இருப்பினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.

 வெளிநாடு செல்லும் யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகளின் திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

 குபேர யோகம் :

 இரண்டாம் அதிபதி ஒன்பதில் இருப்பினும் அல்லது இரண்டாம் வீட்டில் ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் அதிபதி அமைவதால் உண்டாவது குபேர யோகம் ஆகும்.

 குபேர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

 அளவுக்கு அதிகமான தனவரவு உண்டாகும்.

 ஞாபக மறதி யோகம் :

 ஐந்தாம் அதிபதி மறைவு வீடுகளில் இருந்தாலோ அல்லது ஐந்தாம் அதிபதி பலம் இழந்தாலோ உண்டாவது ஞாபக மறதி யோகம் ஆகும்.

ஞாபக மறதி யோகத்தால் உண்டாகும் பலன்கள் :

உடனுக்குடன் எதையும் மறந்துவிடும் இயல்புடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக