>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 6 ஜனவரி, 2020

    புத்திசாலி புலவர்..!

     Image result for புத்திசாலி புலவர்..!
    ரு அழகிய கிராமத்தில் திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார். புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீங்களும் முயற்சிக்கலாமே! என்று கூறினார்.

    உடனே புலவரும், இது சரியான தருணம் என்று கருதி மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார். மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சியை பற்றியும் புகழ்ந்து பாடினார். புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவரிடம், உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்! என்று கூறினார்.

    புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக்கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாக்கினால் அதை தக்க பரிசாக ஏற்றுக்கொள்வேன்! என்று கூறினார்.

    மன்னர் புலவரைப்பார்த்து, நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா? என்று கேட்டார். புலவரோ, அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்! என்று கூறிவிட்டார். பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

    பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்! என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

    1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, என நெல்மணிகளை அடுக்கினர். 20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காத அளவுக்கு பெருகியது. விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் தாண்டியது.

    இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது. புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறையும் உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார். இந்த ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார். 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக