>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 6 ஜனவரி, 2020

    இந்து திருமணத்தை மசூதியில் நடத்த அனுமதி வழங்கிய முஸ்லிம்கள்.!

    குட் நியூஸ்.! இந்து திருமணத்தை மசூதியில் நடத்த அனுமதி வழங்கிய முஸ்லிம்கள்.!


    கேரளாவில் திருவனந்தபுரத்தின் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி ஒன்றுள்ளது. இதன் அருகில் ஒரு வாடகை வீட்டில் உள்ள பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். 

    இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். இந்நிலையில், பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு அந்த பகுதியில் உள்ள சரத் சசி என்பவருடன் வரும் ஜனவரி 19-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதால், ஏழ்மையின் காரணமாக மண்டபம் உள்ளிட்ட செலவுகள் பிந்துவால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால், அவருக்கு பழக்கமான அலூமூத்தில் என்ற முஸ்லிம் குடும்பத்தாரிடம் மகளின் திருமணம் உதவி குறித்து பிந்து கேட்டிருக்கிறார். பின்னர் அவர் அந்த மசூதி அறக்கட்டளையின் செயலாளராக உள்ள நிலையில், பிந்து குடும்பத்திற்கு உதவி வேண்டுமென்று மசூதியில் தொழுகைக்கு வந்தவர்களிடன் கோரிக்கையை வைத்துள்ளார்.

    மேலும் பிந்துவின் நிலைமை கருதி அனைவரும் மசூதி வளாகத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கினர். இதனையடுத்து வரும் ஜனவரி 19-ம் அந்த மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. 

    அம்மசூதி ஜமாத்தின் செயலாளரான அலூமூத் கூறுகையில், தற்போது நாடு முழுவதிலும் மத சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் அதை தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம் என  கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக