புதன், 22 ஜனவரி, 2020

உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் எது தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

சிரிக்கலாம் வாங்க...!!
நந்து : டேய் நாளைக்கு நான் சினிமாவுக்கு போறேன் நீயும் வரியா டா?
பாலா : முடிஞ்சா வரேன் டா...
நந்து : முடிஞ்ச பிறகு ஏன்டா வர? படம் ஆரம்பிக்கும்போது வாடா..
பாலா : 😧😧
---------------------------------------------------------------------------------------------------------
கடவுள் : உன் தவத்தை மெச்சினேன். ஏதாவது 2 வரம் கேள்.
பக்தன் : நான் தூங்கும்போது சாக வேண்டும்.
கடவுள் : ஆகட்டும். அடுத்த வரம்?
பக்தன் : எனக்கு தூக்கமே வரக்கூடாது.
கடவுள் : 😟😟
---------------------------------------------------------------------------------------------------------
மேனேஜர் : எங்க பேங்க்-ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார். ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
மேனேஜர் : 😠😠
---------------------------------------------------------------------------------------------------------
காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
காதலி : (பேசவில்லை)
காதலன் : சொல்லு... நா தப்பா நினைக்க மாட்டேன்.
காதலி : (பேசவில்லை)
காதலன் : இப்ப நீ சொல்ல போரியா? இல்லையா?
காதலி : பேசாம இரு. count பண்ணிக்கிட்டு இருக்கேன்... அப்புறம் மறந்துட போறேன்.
காதலன் : 😠😠
---------------------------------------------------------------------------------------------------------
இளைஞன் : சின்ன பையன் நீ... உன்னோட போட்டி போட்டா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
சிறுவன் : அதுவா...? 'உ"-வும் 'எ"-வும்தான் வித்தியாசம்!
இளைஞன் : 😠😠
---------------------------------------------------------------------------------------------------------
ரொம்ப கஷ்டமான, ஈசியான விஷயம் எது?
உலகத்திலேயே ஈசியான விஷயம்
பணம் சம்பாதிப்பதுதான்.
ரொம்ப கஷ்டமான விஷயம்
அந்த ஈசியான வழியை கண்டுபிடிப்பதுதான்.
---------------------------------------------------------------------------------------------------------
திருக்குறள்..!!

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

விளக்கம் :

கற்பவை கற்று, சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்து காத்திருக்கும்.
---------------------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

பலூன்களை போலத்தான் சில பிரச்சனைகளும்...
ஊதினால் உடையும் என தெரிந்த பின்
ஊதி உடைப்பதை விட, பாதியில் பறக்க
செய்வதே மிகவும் சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்