>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 22 மே, 2020

    உங்களுக்கும் இந்த டவுட் இருக்கா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்க சிரிக்க சிரிப்பு..!!

    நண்பன் : பையன் என்ன செய்யப் போறான்?
    தந்தை : மேலே படிக்கப் போறான்.
    நண்பன் : டாக்டருக்கா, இன்ஜினியருக்கா?
    தந்தை : அட, அது இல்ல... மாடி மேல போய் நாவல் படிக்கப் போறான்.
    நண்பன் : 😏😏
    ---------------------------------------------------------------------
    ராமு : டாக்டர் மனுஷனோட உயிர் போற நிமிடங்களை நாங்க நேரடியா டெலி-காஸ்ட் பண்ணனும்னு ஆசைப்படுறோம்!
    டாக்டர் : அதுக்கு நான் என்ன செய்யணும்?
    ராமு : நீங்க பேஷண்டுக்கு ஆப்ரேஷன் பண்ணும்போது சொன்னீங்கன்னா, கேமராவோட வந்துடுவோம்!
    டாக்டர் : 😳😳
    ---------------------------------------------------------------------
    காதலன் : கட்டுன புடவையோட வா-ன்னு சொன்னா எதுக்கு பெட்டி நிறைய துணிய எடுத்துக்கிட்டு வந்திருக்க?...
    காதலி : இதெல்லாம் நான் கட்டுன புடவைதான் டார்லிங்...
    காதலன் : 😲😲
    ---------------------------------------------------------------------
    இது குற்றமா?

    அன்னைக்கு ஒருநாள் எங்க வீட்டு அயன் பாக்ஸ் வேலை செய்யலைன்னு பக்கத்து வீட்டுக்கு போயி அயன் பாக்ஸ் கேட்டேன்...
    இங்கேயே அயன் பண்ணிக்கோன்னு சொன்னாங்க...
    அடுத்தநாள் பக்கத்து வீட்டுக்காரங்க எங்க வீட்டுல வந்து துடைப்பம் கேட்டாங்க...
    நான் இங்கேயே கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன்...
    அதுக்கு போயி அவங்க என்மேல கோவிச்சுக்கிட்டு முரச்சு பாத்துட்டு போயிட்டாங்க...
    நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? அவங்க சொன்னத தான நானும் சொன்னேன்...😌😌
    ---------------------------------------------------------------------
    உங்களுக்கும் இந்த டவுட் இருக்கா?
    கரண்ட தொட்டாலே ஷாக் அடிக்குது...
    அப்படின்னா எப்படி அதை தொடாம கண்டுபிடிச்சுருக்க முடியும்?
    ஒன்னும் புரியலையே...!!😇😇
    ---------------------------------------------------------------------
    அப்படியா?

    எதுத்த வீட்டுக்காரனுக்கு பிரச்சனை வந்தா கடவுள் தண்டிக்கிறாராம்...
    அதுவே அவனுக்கு பிரச்சனை வந்தா கடவுள் சோதிக்கிறாராம்...😏😏
    ---------------------------------------------------------------------
    இன்றைய தத்துவம்...!!
    தண்ணீல சர்க்கரையை போட்டாலும்,
    சர்க்கரையை தண்ணீீரை போட்டாலும்
    கரைய போவது என்னமோ சர்க்கரைதான்..
    அதே மாதிரி வாழ்க்கையை நினைச்சு வருத்தப்பட்டாலும்,
    வருத்தப்பட்டுக்கிட்டே வாழ்ந்தாலும்
    வீணா போவது என்னமோ நம்ம வாழ்க்கைதான்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக