சிரிக்கலாம் வாங்க...!!
நோயாளி : டாக்டர்! நீங்க எனக்காக ஒரு
காரியம் பண்ணணும்!
டாக்டர் : சாரி! நான் ஆப்ரேஷன்
மட்டும்தான் பண்ணுவேன், காரியம் எல்லாம் பண்ணமாட்டேன்!
நோயாளி : 😳😳
-------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் 1 : எதுக்கு பசங்க
எல்லாரையும் வாசல்ல உக்காரவெச்சு பரீட்சை எழுத விட்டிருக்காங்க.
ஆசிரியர் 2 : என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!
ஆசிரியர் 1 : 😬😬
-------------------------------------------------------------------------------------------------------
ராணி : நான் ஒரு கேள்வி கேட்பேன்.
பதில் சொல்றியா?
வேணி : ம்ம்..
ராணி : 20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள்
ஒரு யானை விழுந்திடுச்சு... அது எப்படி வெளியே வரும்?
வேணி : தெரியலையே...
ராணி : ஈரமாதான் வரும்.
வேணி : 😠😠
-------------------------------------------------------------------------------------------------------
மாலினி : உங்க சோப்பு கம்பெனிக்கு
தென்னை மர சோப்பு கம்பெனின்னு ஏன் பெயர் வச்சிருக்கீங்க?
ஷாலினி : எங்க சோப்பு கம்பெனிக்கு
கிளைகள் கிடையாது. அதனால்தான்.
மாலினி : 😩😩
-------------------------------------------------------------------------------------------------------
வாணி : நீ சொன்னயேன்னு அந்த
டாக்டர்கிட்டே போனேன். அவர் என்னை ரொம்ப நேரம் உத்து உத்துப் பாத்தாருடி.
ராணி : நான்தான் சொன்னேன்ல, இந்த
ஏரியாவுலேயே அவர்தான் நல்லா பாப்பாருன்னு.
வாணி : 😶😶
-------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கடி !!
😜 கிராமத்துல ஒரு திருவிழா,
ஆனால் பெண்களே இல்லை. ஏன்?
அது திரு-விழா, திருமதி-விழா
இல்லையே...
😜 போருக்குப் போகும்போது
ஒருத்தர் குடை எடுத்துட்டுப் போனார். ஏன்?
அங்கே குண்டுமழை பெய்யுது...
😜 கல்யாணத்துல ஏன் மாடுகளை
விடுறதில்லை? ஏன்?
கல்யாணங்கிறது ஆயிரம் காலத்துப்
பயிர், மேஞ்சிடக் கூடாதில்ல...
-------------------------------------------------------------------------------------------------------
விடுகதைகள் !!
1. இளமையில் உயரம், முதுமையில் கட்டை.
அது என்ன?
2. மாடிகளற்ற வீட்டில் எல்லா
பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில்
இருக்கும்?
3. உலகம் முழுதும் சுற்றும். ஆனால்,
ஒரே இடத்திலேயே இருக்கும். அது என்ன?
விடைகள் :
1. மெழுகுவர்த்தி.
2. படிகள் இருக்காது.
3. முத்திரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக