இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொன்னேரி
என்ற சிறிய கிராமத்தில் மதன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அந்த ஊரில்
இருக்கப்பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். அப்போது உச்சி
வெயில் அதிகமானதால் ஆலமரத்தடியில் படுத்துக்கொண்டான். அவனை யாரோ தட்டி எழுப்புவது
போல் இருந்தது. தூக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில்
உட்கார்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பேய்... பேய்... என்று அலறினான்.
தம்பி
பயப்படாதே... நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன் என்று
அந்த பேய் கூறியதும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். அந்த
பேய் மதனிடம், நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். ஒரு நாள் இந்த காட்டிற்கு
வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம்
அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார்.
பிறகு
நான் அவரைப் பார்த்து இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது? இந்த சாபத்திற்கு
ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதனால் அவர் என்னிடம், உன் கதையை
எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு
விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்
என்றார்.
பல
காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும்
ஓடிவிடுகிறார்கள் என்று கூறிய பேய் மறைந்து பழையபடி மனிதனாக தோன்றினான். என்னை
எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும்
வெற்றி அடைவாய், என்று கூறி பேய் மேகத்தின் நடுவில் மறைந்துவிட்டது.
மதனுக்கு
எல்லாமே கனவு போல் இருந்தது. பிறகு புதிய நகரை அடைந்தான். அங்கே திருவிழா போல
இருந்தது. அங்கு விசாரித்த போது அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை
கொண்டாடுகிறார்கள். கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். போட்டிகளில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள், என்று
கூறினார்கள்.
அனைத்து
போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதன் பேயை
மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான்.
அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டான். அங்கிருந்த அழகிய
மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது.
நடு
இரவில் விழித்த மதன், அங்கு சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக்
கண்டான். அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு
தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான். அங்கு அமைச்சர்
நகைகள், பணத்தை எல்லாம் திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாளை
உருவி மதன் அவரை வெட்டச் சென்றான். அதற்குள் ரகசிய வழியில் அமைச்சர் தப்பிவிட்டார்.
பிறகு
மதன் தன் இருப்பிடத்திற்கு சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல
மூடச் செய்தான். இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி
செய்து கொண்டான். இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான்.
பல
நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல்
போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதன் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே
அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார்.
அரசனது
முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ
அறிந்த அமைச்சர், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம்
இப்போது தான் புரிந்தது. மதனை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சராக்கிக்
கொண்டார். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மதன் மகிழ்ந்தான். தனது
நேர்மைக்கும், துணிவுக்கும் கிடைத்த பரிசு தான் இது என மதன் பெருமிதம் கொண்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக