Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 ஜூன், 2020

இப்படி இருந்தால் எல்லாமே வெற்றிதான்...😌 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------------------

சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...!!
--------------------------------------------------------------------
பாபு : ரோட்ல ஒரு பையன் போகும்போது தும்மிக்கிட்டே போனான்..
ராஜா : ஏன் அவன் தும்மிக்கிட்டே போனான்?
பாபு : ஏன்னா அவன் பொடி பையன்...😝
ராஜா : 😑😑
--------------------------------------------------------------------
தந்தை : எப்போ பாரு டீவி பாத்துக்கிட்டே இருக்கியே... மிஸ்க்கிட்ட சொல்லட்டுமா?
மகள் : எப்போ பாரு மிஸ் பத்தியே பேசுறியே... நான் அம்மாக்கிட்ட சொல்லட்டுமா?
தந்தை : 😳😳
--------------------------------------------------------------------
வழக்கறிஞர் : புருஷன் கிட்ட இருந்து விவாகரத்து கேட்ட... வாங்கிக்கொடுத்தேன். இப்போ வந்து மறுபடியும் சேர்த்து வைங்கன்னு கேக்குற... ஏன்?
சீலா : அந்த மனுஷன் என் முன்னாடியே சந்தோஷமா இருக்காரு.
வழக்கறிஞர் : 😬😬
--------------------------------------------------------------------
எண்ணுவதெல்லாம் உயர்வு... படித்ததில் பிடித்தது...!!
--------------------------------------------------------------------
👉 நேரத்தை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டவர்கள்
தனக்கு நேரம் சரியில்லை என்று புலம்ப மாட்டார்கள்...
நேரங்களில் இல்லை முன்னேற்றம்...
சரியான திட்டமிடுதலில்தான் வெற்றி அமைந்திருக்கிறது...
--------------------------------------------------------------------
இப்படி இருந்தால் எல்லாமே வெற்றிதான்...!!
--------------------------------------------------------------------
😀 மலர்ந்த முகத்துடன் இருங்கள்...
😄 மகிழ்ந்த மனதுடன் இருங்கள்...
😌 பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள்...
🙏 நீங்கள் எங்கு சென்றாலும், வரவேற்கப்படுவீர்கள்...
💪 எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்...!!
--------------------------------------------------------------------
          இப்படி வாழாதீர்கள்...!!
--------------------------------------------------------------------
🌟 நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், கடந்த காலத்தில் நடந்த தவறுகளை மாற்ற முடியாது...

🌟ஆனால் அதே தவறை நிகழ்காலத்தில் செய்யாமல் இருந்தால் நீங்கள் நினைத்ததை அடையலாம்.

🌟கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த முடிவுகளுக்கும், தவறுகளுக்கும் மற்றவர்கள் யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை...

🌟கடந்த காலத்தில் மூழ்கியிருப்பதை விட, நிகழ்காலத்தில் செய்யும் சிறு முயற்சியும், பயிற்சியும் பலனளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக