கொடிமரம் என்பது இறைவனை குறிக்கும்.
கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும்.
உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் (மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்) குறிக்கும். நந்தி தர்மத்தை குறிக்கும்.
கர்பகிரகத்தில் இருக்கும் இறைவன் எப்போதும் தர்மத்தையே பாக்கிறான் என்பதே அர்த்தம்.
பெரிய நான்கு கோபுரவாசல் ஆலயங்கள் நான்கு வழிகளை காட்டுகின்றன. அவை பக்திவழி.ஞானவழி, ராஜவழி, கர்மவழிகளை குறிக்கும்.
எந்த வழிகளாலும் நீ இறைவனை காணலாம் என்பதே அதன் அர்த்தம்.
இங்கே நான்கு வாசல் வைக்கப்பட்ட ஆலயமானாலும் கர்பகிரத்துக்கு ஒருவாசல் தான் வைத்தார்கள் ஏன் என்றால் தாயின் கருவறையும் ஆலய கர்பகிரகமும் ஒன்றுதான்.
அதனாலேயே கர்பகிரகத்தை இருளாகவும் அதன் விதானத்தையும் அரைகோளவடிவமாக வைத்தார்கள்.
வெளியில் உள்ள ஒளிகதிர்களை கோபுரம் வாங்கி கர்பகிரத்து அனுப்புகிறது.
கர்பகிரகம் இருளாக இருப்பதால் அந்த ஒளிக்கதிர்கள் தங்கமுடியாமல் வெளியேறிகொண்டு இருக்கும்.
கருவறையில் ஒளிக்கும் வேத மங்கள மந்திர அலைகள் இதனாலே வெளியே பரவுவதால் அவை உடலில் படவேணும் என்பதற்காகவே ஆண்கள் சட்டை அணிவது இல்லை.
கர்பகிரகத்துள் இறைவன் ஏன் வந்தான் என பார்போம். ஆண்பெண்கலவையிலேயே கர்பம் தரிக்க முடியும்.
அந்த கலவையின் நிறமாகதான் ஆணின் வெள்ளையணுவை வெள்ளை நிறமாகவும் பெண்ணின் கருப்பை நிறத்தை காவி (சிப்பு) நிறமாகவும் ஆலய வெளிச்சுவரில் வெள்ளையும் காவியுமாக வர்ணம் தீட்டிணார்கள்.
இந்த கலவையில்தான் இறைவனின் ஆன்மா தாயின் கர்பகிரகத்துள் பிண்டவடிவில் தோண்றுகிறான்.
இந்த பிண்ட வடிவம்தான் லிங்கத்தின் உறுளை வடிவமாக வைத்தனர். மிருகங்கள் கூட பிண்டவடிவிலேயே தோண்றுகின்றன.
அதனால் இவை எல்லா உயிகளின் தோற்றம் இறைவன் இயக்கம் என்பதை உணர்த்துவதே.
இறைவனை வேதமந்திர மூலமாக..
ஆகாயத்தில் இருந்து காற்றுக்கு அணுப்பி காற்றில் மூலமாக யாகத்துக்குள் அணுப்பி வைத்து யாகஅக்னியில் இருந்து நிறைகும்பத்துக்கு மாற்றி அந்த நீரை விக்ரகத்துள் அனுப்பி பஞ்சபூதத்தை அந்த விக்ரகத்துள் அடக்கியே நாம் இறைவனை வழிபடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக