Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

சிரிக்க ரெடியா இருக்கீங்களா? - ரிலாக்ஸ் ப்ளீஸ் !!

சிரிக்க மட்டுமே...!!
ஆசிரியர் : பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை விரிச்சு போட்டுக்கிட்டு வர்றது?
மாணவி : நீங்க தான டீச்சர் நேத்து பின்னிடுவேன்... பின்னிடுவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க...
ஆசிரியர் : 😠😠
--------------------------------------------------------
காதலன் : கண்ணே...! உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்.
காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டுறீங்க?
காதலன் : உங்க வீட்டு புயவந-ஐ தாண்டும்போது தடுக்கி விழுந்துட்டேன்.
காதலி : 😁😁
--------------------------------------------------------
ராணி : நீ என்னோட பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டியாமே...
குட்டி பையன் : ஆமா...
ராணி : முதல்ல என்கிட்ட தான நீ கேட்டிருக்கணும்...
குட்டி பையன் : உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே...
ராணி : 😂😂
--------------------------------------------------------
சிறந்த வரிகள்..!!

🌟 தனித்துவமாக இருக்க இதற்கு முன் எவரும் சந்தித்திராத கடினமான யுத்தத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். அந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் பலன் நிச்சயம்.

🌟 உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.

🌟 எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.

🌟 உயரிய நோக்கம் இருந்தால் மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற சுவர்கள் தவிடுபொடியாகிவிடும்.
--------------------------------------------------------

மதிப்பு...!!

நாம் என்ன செய்யப்போகிறோம்? என்பதை வைத்து நாம் நம்மை மதிக்கிறோம்...

நாம் என்ன செய்துள்ளோம்? என்பதை வைத்து உலகம் நம்மை மதிக்கிறது...
நம் வாழ்க்கையின் மிகச்சிறந்த 
பொக்கிஷம்...!!
வாழ்க்கையின் மிகச்சிறந்த பொக்கிஷம் என்பது
சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதலும், மாறுதலும்தான்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக