🌞 சூரியன்தான் ஆட்சியாளர்களை உருவாக்குபவர். சூரியனின் அருளின்றி எவரும் அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது. மேலும் ஜாதகருக்கு வலிமையையும், எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவர் சூரியனே.
🌞 5-ம் வீட்டை புத்திர ஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவருக்கு குழந்தை பிறக்குமா? பிறக்காதா? என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். மேலும் இந்த வீட்டை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். முன் ஜென்மத்தில் ஒருவர் புண்ணியம் செய்தாரா? பாவம் செய்தாரா? என்பதை இந்த வீட்டைக் கொண்டு தீர்மானிக்கலாம்.
🌞 லக்னத்திற்கு 5-ம் இடத்தில் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் சொற்ப அளவு மட்டும் பலன் பெறுவார்கள்.
5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?
👉 குடும்பம் அளவாக இருக்கும்.
👉 மிகுந்த அறிவாற்றல் உடையவர்கள்.
👉 வாழ்க்கை வளமாக இருக்கும்.
👉 கலை சார்ந்த விஷயங்களில் ரசனை உடையவர்கள்.
👉 வலிமையான உடலை உடையவர்கள்.
👉 எதிலும் போராடி வெற்றி பெறக்கூடியவர்கள்.
👉 மனதில் ஏதாவது ஒரு துக்கம் உடையவர்கள்.
👉 குழந்தை பாக்கியம் தாமதப்படும்.
👉 ஏற்ற இறக்கமான பொருளாதார நிலை உடையவர்கள்.
👉 மலை சார்ந்த பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள்.
👉 பூர்வீக சொத்துக்களால் மனவருத்தங்கள் உண்டாகும்.
👉 தன்னுடைய முயற்சிகளால் முன்னேற்றமடைவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக