சிரிக்கலாம் வாங்க..!!
ஆசிரியர் : வாஸ்கோடகாமா இப்போ இருந்தா அவருடைய பேர் என்னவா இருக்கும்?
மாணவன் : இஸ்கோடகாமா...
ஆசிரியர் : ஏன்?
மாணவன் : ஏன்னா 'Was" இறந்தகாலம், 'is" நிகழ்காலம்.
ஆசிரியர் : 😏😏
-----------------------------------------------------------------------
சீலா : Heart Attack வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?
டாக்டர் : எதுக்குமா கேக்குறீங்க?
சீலா : பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டியிருக்கு...
டாக்டர் : 😂😂
-----------------------------------------------------------------------
இன்றைய கடி...!!
இன்றைய கடி...!!
பேக் கட் ஆனா தைக்கலாம்...
துணி கட் ஆனா தைக்கலாம்...
கரண்ட் கட் ஆனா தைக்க முடியுமா?
ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம்... ஆனா
1000 யானை நினைச்சா ஒரு எறும்ப கடிக்க முடியுமா?...
மெழுகுவர்த்தில மெழுகு இருக்கும்.
ஆனா கொசுவர்த்தில கொசு இருக்குமா?...
-----------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
விளக்கம் :
ஆடம்பரச் செலவு செய்து, ஆராய்ந்து நீதி வழங்காத அரசு, தாமாகவே தாழ்ந்த நிலையை அடைந்து கெட்டுவிடும்.
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
படித்ததில் பிடித்தது...!!
👉 இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாதீர்கள்.
👉 தள்ளிப் போடுவதும், தாமதப்படுத்துவதும் காரியத்தை முடிக்க உதவுவதில்லை.
👉 நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் பொறுப்பும், சிக்கலும் அதிகமாகிவிடும்.
👉 'நாளைக்கு செய்வேன்" என்று சொல்பவன் எதையும், என்றைக்குமே செய்யமாட்டான்.
👉 தாமதமின்றி உடனே முடிவெடுங்கள். அதை செயற்படுத்த தாமதிக்காதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக