இறைவன்: சுந்தரேஸ்வரர்
இறைவி : மீனாட்சி
பழமை:2000 வருடங்களுக்கு மேல்
தீர்த்தம் : அனந்த தீர்த்தம்
மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, பத்மநாப பெருமாள்
ஸ்தல விருட்சம்: வாகை மரம்
வழிபட்டோர் : பிரம்மா,விலங்குகள், இந்திரன், சந்திரலேகை
தலபெருமை :
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி ஆவார்
இத்தல இறைவி மீனாட்சி சன்னதியில் திருமணம் நடத்தினால் கணவன் மனைவியர் எந்த தோஷம் என்று இன்புற்று வாழலாம் என்பது ஐதீகம்.
பஞ்சமுக சிவபெருமான் :
இவ்வாலயத்திலுள்ள சதாசிவமூர்த்தியை (பஞ்சமுக சிவபெருமான்)தீபமேற்றி வழிபட்டால் சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரம்மாவிற்கு ஏற்பட்ட சிவ இடர்தோஷம் நீங்கிய தலம்
இத்தல இறைவி பாதம் முன்பும் பின்பும் அமைந்திருப்பது வேறு எங்கும் அமையா ஒன்று
மஹாசிவராத்திரி அன்று சூரியன் சுந்தரேஸ்வரரை தரிசிக்கும் அதிசியம் நடைபெறுகிறது
இத்திருக்கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வ தோஷமும் நீங்கும் என்பது ஐதிகம்
இத்திருக்கோயிலில் உள்ள சப்த கன்னியர்களுக்கு தொடர்ந்து 48 நாட்கள் தீபம் ஏற்றினால் தீராத நோய்களும் தீரும்.
துர்க்கைக்கு தனி சன்னதி உள்ள தலம்.
தட்சிணாமூர்த்திக்கு நேரெதிரே இத்தளத்தில் சப்தகன்னிகள் வீற்றிருப்பதால், இவர்களை வணங்க செல்வ செழிப்பு உண்டாகும்.
சூரியபகவான் தனது இரு மனைவியாகிய உஷா மற்றும் பிரத்யுக்ஷாவுடன் சன்னதி கொண்டுள்ள திருத்தலம்.
சிவன் விஷ்ணு பிரம்மா முறையே அமைந்த மும்மூர்த்திகள் ஸ்தலம்
ரதசப்தமி :
ரத சப்தமியன்று இவ்வாலய #சோமாஸ்கந்தர் முகத்தில் #சந்திரரேகை தோன்றி மறையும் அதிசயம் நடைபெறும்.
அன்னாபிஷேகம் :
இவ்வாலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது,#சந்திரன் இறைவனை வணங்கும் அற்புத நிகழ்வு நடைபெறும், அன்றைய தினம் தவறாமல் மழை பொழியும் அதிசயமும் இன்றளவும் நடைபெறக் கூடியது.
திருவாதிரை :
திருவாதிரையின்போது இத்தல நடராஜரை காவேரியில் நிராடி வணங்குவதால் மாங்கல்ய பாக்யம் உண்டாகும்
சங்கராந்தி
இத்தல சங்கராந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது
பிரதோஷம்
இத்தல இறைவன் இறைவி நந்தியம்பெருமானை ஒரே இடத்தில் நின்று காணலாம் வேறு எங்கும் அமையா ஒன்று
திருவிழா :
வைகாசி விசாகம்
நடைதிறப்புநேரம் :
காலை : 5:30 மணி முதல் 11 மணி வரை
மாலை : 4:00 மணி முதல் 8:00 மணி வரை
முகவரி :
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். செந்தலை ,
திருவையாறு வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் விவரங்களுக்கு :
ரெ. சுந்தரபாண்டியன்
எழுத்தர்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
செந்தலை
தொலைபேசி : 8110955290
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக