>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 26 நவம்பர், 2019

    சிந்திக்க வைக்கும்... ஒரு குட்டி கதை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!



    இது சிரிப்பதற்கான நேரம்..!!

    நர்ஸ் : ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
    டாக்டர் : இன்னிக்கு மதியம் நான் ஆப்ரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.
    நர்ஸ் : டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆப்ரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
    டாக்டர் : அப்போ... காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?.
    நர்ஸ் : ???
    -----------------------------------------------------------------------------------------------------------
    கணவன் : அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
    மனைவி : சுக்குக் கஷாயம் காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க... எல்லாம் சரியா போயிடும்.
    கணவன் : ஓகே. அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போடுகிறேன்..
    மனைவி : ????
    -----------------------------------------------------------------------------------------------------------

    வரவேற்பாளர் : வாங்க... வாங்க... நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? இல்லை பெண் வீட்டுக்காரரா?...
    கண்ணன் : இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க...
    வரவேற்பாளர் : !!!!..
    -----------------------------------------------------------------------------------------------------------

    ஒரு குட்டி கதை !!
    ஒரு கட்டுமான இஞ்சினியர் 13 வது மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார். ஒரு முக்கியமான வேலை. கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்.

    செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் இஞ்சினியர்.. ஆனால், கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்டே இருந்தார் போனை எடுக்கவில்லை..

    இஞ்சினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து, அவரால் இஞ்சினியரை நன்றாகப் பார்க்க முடியும்.

    இஞ்சினியர் என்ன செய்வதென்று யோசித்தார்?. பிறகு ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்.

    ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார். ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை. இஞ்சினியருக்கு ஒரே கோபம்.. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனாரின் மேல் போட்டார். அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கொத்தனார் மும்முரமாக இருந்தார்.

    இஞ்சினியர்.. பொறுமை இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார். அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார். அப்பொழுதுதான் இஞ்சினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்.

    மனிதனும் அப்படித்தான். மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்..

    இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்.. அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை..

    ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான். துன்பங்கள் வரும் நேரம் இறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் என்று பொருள்.
    -----------------------------------------------------------------------------------------------------------

    இன்றைய பொன்மொழி !!

    லட்சியம் இல்லாத வாழ்க்கை முள்
    இல்லாத கடிகாரம் போன்றது,
    அது நின்றாலும் பயன் இல்லை!
    ஓடினாலும் பயன் இல்லை!
    வானத்தில் மாளிகை கட்டு தவறில்லை!
    ஆனால் தரையில் அஸ்திவாரம் போடு..
    -----------------------------------------------------------------------------------------------------------

    விடுகதைகள் !!
    ஒரு ஜான் குச்சிக்குள்ளே, ஒளிந்திருக்கான் கருப்பு மனிதன் அவன் யார்? - பென்சில்

    ஒரு கரண்டி மாவு, ஊரெல்லாம் தோசை அவன் யார்? - நிலா.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக