>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 26 நவம்பர், 2019

    ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ஆமை திரும்பவும் win பண்ணிருச்சு... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!



    சிரிக்கலாம் வாங்க...!!

    முதியவர் : என் மனைவியை எப்போதும் னுயசடiபெஇ ளுறநநவ ர்நயசவ-ன்னுதான் கூப்பிடுவேன்..
    அருண் : ஏங்கையா எப்படி இவ்ளோ வருஷமாகியும் மனைவியை னுயசடiபெஇ ளுறநநவ ர்நயசவ-ன்னு கூப்பிடுறீங்க?
    முதியவர் : ஏப்பா, நீ வேற! பத்து வருஷத்துக்கு முன்னாடியே அவ பேர் மறந்து போச்சு.. அவக்கிட்ட பேர கேக்கவும் பயமா இருக்கு...
    அருண் : 😛😛
    -------------------------------------------------------------------------------------------------------------
    பாபு : கோழி ஏன் முட்டை போடுது?
    குமார் : தெரியலையே...!
    பாபு : ஏன்னா... அதுக்கு 1,2,3 போடத்தெரியாது, அதான்.
    குமார் : 😬😬
    -------------------------------------------------------------------------------------------------------------
    பையன் : அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்!
    அப்பா : அப்படியா, மேஸ்திரிக்கிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்...
    பையன் : 😩😩
    -------------------------------------------------------------------------------------------------------------

    இது எப்படி இருக்கு?

    எல்லோருக்கும் பிடித்த பூ எது?

    சிரிப்பூ.

    இந்த கடைக்கு அருகே போனால், மூக்கை மூடிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அது எந்த கடை?

    சாக்கடை.

    மாணவ, மாணவியர் எந்த பெண்ணை அதிகம் விரும்புவார்கள்?

    மதிப்பெண்.

    சாப்பிட உகந்த நாள் எது?

    திங்கட்கிழமை.
    -------------------------------------------------------------------------------------------------------------
    ஆமையும்... முயலும்...!!

    ஆமையும்... முயலும் ஒரு நுழைவுத்தேர்வு எழுதின.

    ஆமை 80%, முயல் 81% பெற்றன.

    இரண்டு பேரும் ஒரு பொறியியல் கல்லூரியில் அட்மிஷனுக்காக சென்றார்கள்.

    வேண்டிய கட் ஆஃப் 85%!

    முயலுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லை. ஆனால், ஆமைக்கு கிடைத்தது..!

    எப்படி?🤔

    உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நாம் ஒன்னாம் வகுப்பு படித்தபோது ஆமை ஒரு போட்டியில் ஜெயித்தது...

    விளையாட்டில் ஜெயித்ததால் 5% கூடுதல் மதிப்பெண்கள்!

    5% திரும்பவும் ஆமை ஜெயிச்சிடுச்சு.😁😁
    -------------------------------------------------------------------------------------------------------------
    வாய்ப்புகள் நம்மை தேடி வராது !!
    ஒரு பிரபல தொழிலதிபரை பார்த்து ஒரு இளைஞர், உங்களது வெற்றியின் ரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார்.

    தொழிலதிபர் : ரகசியம் என்று எதுவுமில்லை. வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்த்து கதவை தட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

    இளைஞன் : வாய்ப்பு எப்போது கிடைக்கும்? கதவு எப்போது திறக்கும்? என்று எப்படி கண்டுபிடிப்பது?

    தொழிலதிபர் : கண்டுபிடிக்க வழியில்லை! திறக்கும் வரையில் தட்டிக் கொண்டு இருப்பதுதான் வழி.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக