Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

பூரட்டாதி நட்சத்திரம் !!

Image result for பூரட்டாதி நட்சத்திரம் !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பூரட்டாதி :

பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம்

பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு

பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) : சனி

பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தின் இராசி அதிபதி (மீனம்) : குரு

பொதுவான குணங்கள் :

அழகான மற்றும் சாதுரியமான பேச்சுகளால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

எதிர்கால திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.

எதிர்கால தேவைகளுக்கான சேமிப்பில் விருப்பம் உள்ளவர்கள்.

வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடியவர்கள்.

எண்ணிய செயலை முடிக்கும் வரை ஓயாதவர்கள்.

வசைச் சொற்களை பொறுக்கமாட்டார்கள்.

வாதம் செய்வதில் வல்லவர்கள்.

கல்வி வேள்வியில் ஞானம் உள்ளவர்கள்.

எழில் உடையவர்கள்.

ஆன்மிக ஈடுபாட்டில் விருப்பம் கொண்டவர்கள்.

பிறரின் மனதில் உள்ளதை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

வலிமையான மனமும், உடலும் உடையவர்கள்.

மனைவியிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

எளிதில் எல்லோரிடமும் பழகக்கூடியவர்கள்.

செய்தொழிலில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படக்கூடியவர்கள்.

பூரட்டாதி முதல் பாதம் :

இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

இறை வழிபாட்டில் விருப்பம் உடையவர்கள்.

வலிமை உடையவர்கள்.

போட்டிகளில் ஈடுபாடு உடையவர்கள்.

நல்ல எண்ணங்கள் உடையவர்கள்.

சௌபாக்கியம் உடையவர்கள்.

குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.

பூரட்டாதி இரண்டாம் பாதம் :

இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

யாருக்காகவும் பொய் உரைக்காதவர்கள்.

உணர்ச்சிகள் அதிகம் உடையவர்கள்.

மதிப்புகள் உடையவர்கள்.

மக்களால் விரும்பப்படக்கூடியவர்கள்.

எடுத்த செயலை முடிப்பதற்காக எல்லா வித முயற்சிகளிலும் ஈடுபடக்கூடியவர்கள்.

பூரட்டாதி மூன்றாம் பாதம் :

இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

எப்போதும் புன்சிரிப்பு உடையவர்கள்.

அறவழியில் நடப்பவர்கள்.

கற்பனையில் வல்லவர்கள்.

போஜனத்தில் அலாதி நாட்டம் உடையவர்கள்.

பொருள் சேர்ப்பதில் நாட்டம் உடையவர்கள்.

பூரட்டாதி நான்காம் பாதம் :

இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

நல்ல பண்புகளை கொண்டவர்கள்.

மெய் பேசக்கூடியவர்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்கள்.

பிறருக்கு உதவுவதில் வல்லவர்கள்.

தொழிலில் நாட்டம் கொண்டவர்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக