Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 நவம்பர், 2019

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில்! திருமயம்

Image result for அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில்! திருமயம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். இத்திருக்கோயில் பல்லவர்களால் நிர்மாணிக்கப்பட்ட குடைவரைக்கோவில்.

மூலவர் - சத்தியமூர்த்தி

உற்சவர் - அழகியமெய்யர்

தாயார் - உஜ்ஜீவனதாயார்

தல விருட்சம் - ஆல மரம்

தீர்த்தம் - சத்ய புஷ்கரணி

பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர் - திருமயம்

மாவட்டம் - புதுக்கோட்டை

தல வரலாறு :

 பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர்.

 பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார்.

பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வன்கொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.

தலச் சிறப்பு :

 இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

 இது ஒரு பல்லவர் காலத்திய குடைவரைக் கோவிலாகும். திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த அதிசயிக்கத்தக்க குடைவரைக் கோவிலில் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன.

இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

பிராத்தனை :

 குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது. உஜ்ஜீவனத்தாயாரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் மற்றும் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

நரம்பு தளர்ச்சி, நோயில் துன்புறுபவர்கள் பலர் இத்தாயாரை வழிபட்டால் தங்கள் பிரச்சனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 நேர்த்திக்கடனாக தாயாருக்குத் திருமஞ்சனம், புடவை சாத்துதல், வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் செய்து வழிபடுகிறார்கள். பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், சுவாமிக்குத் தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய், சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக