சிரிக்கலாம் வாங்க...!!
மனைவி : உலகம் பூரா தேடினாலும் என்ன மாதிரி மனைவி கிடைக்க மாட்டா...
கணவன் : எனக்கென்ன பைத்தியமா? மறுபடியும் உன்ன மாதிரியே தேட...
மனைவி : 😠😠
-----------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : ஒரு நாளைக்கு நீங்க கட்டாயம் பத்து கிளாஸ் தண்ணி குடிக்கணும்...
நோயாளி : அது முடியாதே டாக்டர்...
டாக்டர் : ஏன்?
நோயாளி : என் வீட்டுல நாலு கிளாஸ் மட்டும்தான் இருக்கு!
டாக்டர் : 😑😑
-----------------------------------------------------------------------------------------------------
மகன் : அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.
அப்பா : கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?
மகன் : ஒன்னு கியர் போட.. இன்னொன்னு பிரேக் போட..
அப்பா : 😧😧
-----------------------------------------------------------------------------------------------------
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...!!
இதில் எது புத்திசாலி?
🔳 சதுரம்
🔴 வட்டம்
விடை :
சதுரம் தான் புத்திசாலி ஏனென்றால் அதுக்கு 4 மூலைகள் இருக்கிறதாம்.
-----------------------------------------------------------------------------------------------------
சோதனை...!!
புதிதாக திருமணம் ஆனவர்,
தன் மனைவிக்கு காது கேட்கிறதா?...
என சோதிப்பதற்காக வெளியிலிருந்து.. மனைவியிடம்,
இன்று என்ன குழம்பு? என்று கேட்டார்.
பதில் வரவில்லை.
வீட்டிற்குள் வந்து, என்ன குழம்பு? என்றார்.
மனைவியிடமிருந்து பதிலில்லை.
சமையலறைக்கு சென்று... என்ன குழம்பு? என்றார்.
மூன்றாவது... முறையும் பதிலில்லை.
அருகில் வந்து மீண்டும் அதையே கேட்டார்... அதற்கு மனைவி,
நீங்கள் 3 முறை கேட்டதற்கு....
இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொன்னனே....
கேட்கவில்லையா? என்றாள்.
-----------------------------------------------------------------------------------------------------
மூளைக்கு வேலை...!!
பால்காரர் ஒருவரிடம் இரண்டு காலி ஜக்குகள் உள்ளன. அந்த ஜக்குகளில் ஒன்று மூன்று லிட்டரும், மற்றொன்று ஐந்து லிட்டரும் பிடிக்கும்.
ஆனால் பால்காரர் பாலை வீணாக்காமல் ஒரு லிட்டர் பாலை எவ்வாறு அளப்பார்?
விடை :
பால்காரர், முதலில் மூன்று லிட்டர் ஜக்கில் பாலை ஊற்றி அதை ஐந்து லிட்டர் ஜக்கில் நிரப்பிவிட்டார்.
மீண்டும் அந்த மூன்று லிட்டர் ஜக்கை நிரப்பி அதை ஐந்து லிட்டர் ஜக்கில் ஊற்றினார். எனவே ஒரு லிட்டர் அந்த மூன்று லிட்டர் ஜக்கில் தங்கிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக