சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியாயப்படுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக இதன் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது அதிரடியாக
உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 734 ரூபாயாக இருந்த கேஸ் சிலிண்டர் விலையில் 147 ரூபாய்
உயர்த்தப்பட்டு 881 ரூபாயக்கு விற்கப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக, சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக, சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
தற்போது, டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளாக ஒரேயடியாக 140 ரூபாய்க்கும் மேல்
அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கும், தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சர்வதேச அளவில் ஆளுமை செலுத்திவரும் எரிப்பொருள்களின் விலை, அதே சர்வதேச சந்தை நிலவரத்தையும், தேவையையும் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியின் காரணமாக, கடந்த 20 நாள்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.
அதேசமயம், சமையல் சிலிண்டரின் விலையை, அதன் சர்வதேச சந்தை நிலவரம், உபயோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயர்த்த வேண்டிய சூழல். அதனால் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தன்நிலை விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக