>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

    யார் அதிர்ஷ்டசாலி?... நடுவரின் தீர்ப்பு... இது சிரிப்பதற்கான நேரம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -------------------------------------------
    சேகர் : வல்லாரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமாம்...
    குமார் : போன மாசம் வல்லாரை சாப்பிட்டேன். அது மட்டும்தான் ஞாபகத்தில் இருக்குது, மத்ததெல்லாம் மறந்து போச்சு...
    சேகர் : 😡😡
    -------------------------------------------
    ராஜா : டாக்டர்... எனக்கு பஸ்ல ஏறியவுடனே அப்படியே கண்ணைக் கட்டிக்கிட்டு வருது.
    டாக்டர் : வந்தா தூங்க வேண்டியதுதானே.. அதுக்கு ஏன் என்கிட்ட வந்தீங்க...?
    ராஜா : நான் தூங்கிட்டா பிறகு பஸ்ஸை யார் டாக்டர் ஓட்டுறது?
    டாக்டர் : 😟😟
    -------------------------------------------
    மனைவி : அழகான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா? அல்லது அறிவான மனைவியுடன் இருப்பவன் அதிர்ஷ்டசாலியா-ன்னு பட்டிமன்றம் நடந்துச்சே.. எந்த அணிங்க ஜெயிச்சுது?
    கணவன் : அதுவா.. திருமணம் ஆகாதவனே பெரும் அதிர்ஷ்டசாலின்னு நடுவர் தீர்ப்பைக் கொடுத்துட்டாரு.
    மனைவி : 😏😏
    -------------------------------------------
    குட்டி கதை...!!
    -------------------------------------------
    ஒருவன் எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டே இருந்தான்.

    அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தவன் 'நீ எப்போது பார்த்தாலும் சுள்ளி பொறுக்கிக் கொண்டு இருக்கின்றாயே எதற்கு?" என்றான்.

    அவன் குளிர் காய்வதற்கு என்றான்.

    கேட்டவனோ, 'நீ குளிர் காய்வதை நான் பார்த்ததே இல்லையே" என்றான்.

    அவனோ, 'சுள்ளி பொறுக்கவே நேரம் கிடைக்கவில்லை... இதில் குளிர் காய எங்கே நேரம்?" என்றான்.

    நாட்டில் பெரும்பாலும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது வாழ்க்கையை சுகமாக அனுபவிக்கத்தான்.

    ஆனால், சிலர் பணம் சம்பாதிப்பதையே தங்கள் குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.

    குடும்பத்திற்காக சம்பாதிக்கிறேன் என்று அவர்கள் குடும்ப வாழ்வை அனுபவிப்பதில்லை.

    மனைவியிடமோ, குழந்தைகளிடமோ உறவாடி மகிழ நேரமில்லை என்கிறார்கள்.

    எவனொருவன் தூங்க வேண்டிய நேரத்தில், எந்த கவலையும் இல்லாமல் ஆனந்தமாக உறங்குகின்றானோ, அவன் தான் உண்மையான பணக்காரன்.

    அளவோடு உழைத்து, வாழ்க்கையை ஆனந்தமாக வாழ பழகிக் கொள்ளுங்கள்.
    -------------------------------------------
    சிந்தித்து செயலாற்றுங்கள்!!
    -------------------------------------------
    கோபத்தை உப்பு போல பயன்படுத்த வேண்டும்...
    குறைந்தால் மரியாதை இல்லாமல் போய்விடும்...
    கூடினால் மதிப்பு இல்லாமல் போய்விடும்...

    உனது கண்கள் சரியாக இருந்தால்,
    இந்த உலகத்தை உனக்கு பிடிக்கும்...
    உனது நாக்கு சரியாக இருந்தால்,
    இந்த உலகத்துக்கு உன்னை பிடிக்கும்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக