Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

அடைக்கலம் கேட்ட குருவி... தர மறுத்த மரம்... ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------
கலக்கல் காமெடிகள்...!!
-------------------------------------------
மனைவி : என்னங்க ஆப்ரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்ல இருந்து ஓடி வந்துட்டீங்க?...
கணவன் : இல்ல... நர்ஸ் சொன்னாங்க... இது சின்ன ஆப்ரேஷன்தான்.. டென்ஷன் ஆகாதீங்க கடவுள் இருக்காருன்னு....
மனைவி : சரி அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க?... தைரியம் தானே சொல்லியிருக்காங்க...
கணவன் : அது சரிதான்... ஆனால் தைரியம் சொன்னது எனக்கு இல்லை... டாக்டருக்கு..!
மனைவி : 😟😟
-------------------------------------------
நோயாளி : டாக்டர்... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்?...
டாக்டர் : 5 லட்ச ரூபாய் ஆகும்...!
நோயாளி : ஒரு வேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க.?...
டாக்டர் : 😟😟
-------------------------------------------
இரண்டு மரம்..!!
-------------------------------------------
ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.

அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, முதல் மரத்திடம் கேட்டது. 'மழைக்காலம் தொடங்க இருப்பதால்... நானும், என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா?" என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம். அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது.

முதல் மரம் தண்ணீரில் அடித்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, 'எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்" என்றது.

அதற்கு மரம்...

'எனக்கு தெரியும் நான் வழுவிழந்து விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லப்படுவேன். நீயும், உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் உனக்கு இடம் இல்லை என்றேன்... மன்னித்து விடு" என்றது.
-------------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------------
1. கையில்லாமல் நீந்தி, கடல் கடப்பான்... அவன் யார்?

2. மூலையில் முடங்கிக் கிடப்பான், மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்வான்... அவன் யார்?

3. இனிப்பு பொட்டலத்திற்கு இரண்டாயிரம் பேர் காவல்... அது என்ன?

விடைகள் :

1. கப்பல்.

2. துடைப்பம்.

3. தேன்கூடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக