Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

விதி என்றால் என்ன?

முல்லா ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் அமர்ந்து அச்செல்வந்தருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்தச் செல்வந்தர் முல்லாவிடம் விதி என்றால் என்ன? என்று கேட்டார்.

அதற்கு முல்லா நாம் எதிர்பார்க்கும் ஒன்று நமக்கு நடக்காமல் போனால் அதற்குப் பெயர் தான் விதி என்றார். செல்வந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை அதனால் முல்லாவிடம் சற்று தெளிவாகக் கூறும்படிக் கேட்டார்.

முல்லா உடனே நண்பரே, முதலில் நான் உங்களை எதற்காகச் சந்திக்க வந்தேன் என்பதைக் கூறி விடுகிறேன். பிறகு நான் உங்களுக்கு விதியைப் பற்றி தெளிவாக விளக்குகிறேன் என்றார். சரி சொல்லுங்கள் என்றார் செல்வந்தர். முல்லா, உங்களிடம் எனக்கு ஒரு கோடிப் பொன்னைக் கடனாகக் கேட்டு வாங்கிப் போகத்தான் வந்தேன் என்றார்.

என்ன ஒரு கோடிப் பொன் வேண்டுமா? எதற்காக கேட்கிறார் என்பது புரியாமல் திகைத்தார் செல்வந்தர். முல்லா மீண்டும் செல்வந்தரைப் பார்த்து, நான் கேட்டது என்ன ஆயிற்று? என்று கேட்டார். இவ்வளவு பெரிய தொகையைத் திடீரென்று கேட்டால் எப்படி? என்றார் செல்வந்தர்.

நான் உம்மிடம்  கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் வந்தேன். ஆனால் உங்களால் எனக்குப் பணத்தைக் கொடுக்க முடியவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை என்று நீங்கள் தரும் பதிலைக் கேட்டு எனக்கு ஏற்படும் ஏமாற்றம் தான் விதி என்று நினைத்து என் மனதை சமாதானப்படுத்திக் கொள்வேன் என்றார்.

பிறகு செல்வந்தரிடம் முல்லா, இதை தங்களுக்கு விளங்க வைப்பதற்காகவே நான் சும்மா விளையாட்டுக்கு உம்மிடம் கடன் கேட்டேன் நீங்கள் குழப்பமடைய வேண்டாம் எனக் கூறிச் சிரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக