Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

ரிலாக்ஸ் ப்ளீஸ்.. கிளிக்கு திருமணம்.. தடுத்து நிறுத்திய போலீஸ்.. ஏன்? சிரிக்க மட்டுமே.!!

----------------------------------------------
சிரிக்க மட்டுமே..! 
----------------------------------------------
ரயில்வே ஸ்டேஷனில்...,
மனைவி : ஏங்க இப்படி கடுகடுன்னு முகத்தை வெச்சிட்டு இருக்கீங்க? பக்கத்துல இருப்பவரை பாருங்க.. பொண்டாட்டியோட எவ்வளவு சந்தோஷமா இருக்காரு?
கணவர் : விவரம் கெட்டவளே, அந்தாளு வழியனுப்ப வந்திருக்கான்டி... நான் உன்னைய அழைச்சுட்டு போக வந்திருக்கேன்....
மனைவி : 😟😠
----------------------------------------------
ஹா... ஹா... இது எப்படி இருக்கு?...
----------------------------------------------
ஒருநாள் கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடத்துனாங்க...
காக்கா கிளிக்கு தாலிக்கட்டும்போது...
கல்யாணத்தை நிறுத்துங்கன்னு ஒரு குரல் கேட்டது...
திரும்பி பாத்தால் போலீஸ்...
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...
ஏன்?
.
.
.
உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
ரெண்டாங் கிளாஸ் படிக்கும்போது காக்கா பாட்டியோட வடையை திருடிருச்சே...
.
.
.
அந்த குற்றத்துக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க...😬😬

நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
----------------------------------------------
குறளும்... பொருளும்...!!
----------------------------------------------
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலர் தார்.

விளக்கம் :

உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களை கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவார்.
----------------------------------------------
குட்டிக்கதை...!!
----------------------------------------------
காட்டில் ஒரு சிங்கம், ஒரு ஆட்டை அழைத்து என் வாய் நாறுகிறதா? என்று பார்த்துச்சொல், என கேட்டது.

ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு ஆமாம், நாறுகிறது என்று சொல்லியது.

உடனே சிங்கம்... முட்டாளே, உனக்கு எவ்வளவு திமிர்? என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து அதனுடைய கருத்தைக் கேட்டது.

ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு, கொஞ்சம் கூட நாறவில்லை, என்றது.

சிங்கம்... மூடனே, பொய்யா சொல்கிறாய்? என்று கூறி அடித்துக் கொன்றது.

பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.

நரி சொன்னது, நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை என்றது. சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக