Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 மார்ச், 2020

தீர்ப்பு வழங்கும் முன் யோசியுங்கள்... இல்லையேல் இதுதான் நிலைமை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்!!


சிரிக்கலாம் வாங்க...!!

பாபு : இப்படி ஒரு தங்கமான பையன் எனக்கு கிடைச்சதுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்...
ராம் : அவனுக்கு தம் அடிக்கிற பழக்கம் இருக்கா?
பாபு : கிடையவே கிடையாது...
ராம் : குடிப்பானா?
பாபு : இல்லவே இல்லை...
ராம் : இந்த பாக்கு , மத்த சமாச்சாரம் ..?
பாபு : அந்த பக்கமெல்லாம் தலை வச்சுகூட படுக்க மாட்டான்...
ராம் : நீங்க பெரிய அதிர்ஷ்டசாலிதான் சார்... பையனுக்கு என்ன வயசு ஆச்சு?
பாபு : நேத்துதான் ஒரு வயசு ஆகியிருக்கு...
ராம் : 😳😳
------------------------------------------------------------------------------------------------------
குற்ற உணர்ச்சியே கொல்லும்...
மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும், நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒருநாள் சேகர் என்னும் அயலூர்காரன் மன்னன் ராஜவர்மனிடம் அரசே... நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகருக்கு வந்து கொண்டிருந்தேன்.

தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கி கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு அவளை தைத்து உயிரிழந்துவிட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான்.

அவன்தான் என் மனைவியை கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். உடனே அந்த வேடனை அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் அந்த வேடனோ... அரசே.. நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்த பெண்ணை கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான்.

கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள்மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது... வேடனே.. நீ வேறு விலங்கிற்கு குறி வைக்க தவறுதலாக இந்த பெண்ணின்மீது அம்பு பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டார்.
ஆனால் அப்போது தானும் அயர்ந்து உறங்கி கொண்டிருந்ததாக கூறி வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குபின் வெளியூர் சென்றிருந்த மன்னன் முதலமைச்சரை சந்தித்தார்.

அப்போது நடந்த சம்பவத்தை பற்றி அவரிடம் விவாதித்தார். அந்த பெண்ணின் மீது தைத்த அம்பினை பார்த்த முதலமைச்சர் இந்த அம்பினை கவனித்தீர்களா?... அது துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் எப்போதும் துருப்பிடித்த அம்பை பயன்படுத்த மாட்டார்கள்.
அந்த பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்த பெண்ணின் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார். இதை கேட்டு பதறிய மன்னன் தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக