Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 மார்ச், 2020

உங்கள் கையிலுள்ள சூரிய ரேகை உங்களுக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்குமா?

Image result for சூரிய ரேகை

 சூரிய விரல் என்று அழைக்கப்படும் மோதிர விரலுக்கு அடியில் உள்ள சூரிய மேட்டில் தோன்றும் ஒரு குறுக்குக்கோடு தான் சூரிய ரேகை ஆகும்.

 இந்த ரேகையை கொண்டு ஒரு மனிதனின் அறிவுத்திறனையும், ஆற்றலையும் தெரிந்துக்கொள்ள முடியும். மற்ற முக்கிய ரேகைகளைப் போலவே இதுவும் ஆழப் பதிந்திருந்தால் தான் நல்ல அறிவுத்திறனும், ஆற்றலும் உண்டு என்று சொல்லலாம்.

 இந்த ரேகை சந்திர மேட்டிலிருந்தே தொடங்குமானால் இவர்களுடைய அதிர்ஷடத்திற்கும், வெற்றிக்கும் மற்றவர்கள் காரணமாகவும், உதவியாகவும் இருப்பார்கள்.

 இது சூரிய மேட்டை இரண்டாகப் பிளப்பது போல அமையும். இந்த ரேகை பளிச்சென்று அமைந்து சூரிய மேடும், குரு மேடும் நன்கு உயர்ந்து காணப்பட்டால் அவர்கள் மேதைகள் என்றும், சிறந்த அறிவாளிகள் என்றும் போற்றப்படுவார்கள்.

 அதுமட்டுமின்றி விதி ரேகையான சனி ரேகையும் நன்றாக அமைந்திருந்தால் இவர்கள் புகழுடன் விளங்குவார்கள்.

 இந்த ரேகை விதி ரேகையிலிருந்து தொடங்கினால் இவர்கள் சுய முயற்சியினால் வெற்றி அடைவார்கள்.

 இந்த ரேகை இருதய ரேகைக்கு மேலே தொடங்கினால் இவர்கள் மிக அமைதியாகப் பொறுமையுடன் முன்னேறுவார்கள். வாழ்வின் பிற்பகுதியில் இவர்கள் வெற்றி அடைவார்கள். இது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

 மேலும், ஓவியம், நுண்கலை, இலக்கியம் இவற்றில் இவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் சிலர் ஜோதிடம், மாந்திரீகம் இவற்றையும் கற்பார்கள்.

 அதிர்ஷ்ட ரேகை எந்த அளவு அதிகமான நல்ல பலன்களைக் கொடுக்கக்கூடியதாக இருந்தாலும் அவர்களுடைய கையில் சூரிய ரேகை இல்லாவிடில் அவ்வளவு விசேஷ பலனைக் கொடுக்காது.

 சூரிய ரேகை சூரிய மேட்டின் மேலேயே ஒரு சிறு கோடாக நீளமாக இருதய ரேகைக்கு மேலே இருந்தால் நாற்பத்தி மூன்றாவது வயதிலிருந்து ஐஸ்வர்யம் அவர்களுக்கு கிடைக்கும்.

 சூரிய ரேகை இரட்டையாக இருந்தால் இரண்டு விதமான வருமானத்தையும், ஐஸ்வர்யத்தையும் பெறுவார்கள்.

 சூரிய ரேகை சுக்கிர மேட்டிலிருந்து உற்பத்தியாகி சூரிய மேட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவரது வாழ்க்கை எப்படியிருந்தாலும் பூமியாலும், பலசரக்கு வியாபாரத்தாலும், வெள்ளி நவரத்தின வியாபாரத்தாலும் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

 சூரிய ரேகை அதிர்ஷ்ட ரேகையிலிருந்து உற்பத்தியாகி சூரிய மேட்டை அடைந்தால் சுயமுயற்சியாலும், தொழிலாலும் ஐஸ்வர்யம் அவரை வந்து சேரும்.

 ஒருவருக்கு சூரிய மேட்டில் ஒரு செங்குத்தான ரேகையிருந்தால் பிற்கால வாழ்க்கையில் திடீர் யோகம் கிடைக்கும்.

 சூரிய ரேகை சந்திர மேட்டில் ஆரம்பமாகி சூரிய மேட்டுக்குச் சென்றிருந்தால் ஒருவருக்கு கிடைக்கும் ஐஸ்வர்யம் நீண்ட நாள் அவர்களிடம் நிலைத்திருக்காது.

 செவ்வாய் மேட்டிலிருந்து ஒரு குறுக்கு ரேகை உண்டாகி சூரிய ரேகையைப் பிளந்து சென்றால் அந்த வயதில் கஷ்டங்கள் ஏற்படும்.

 சுக்கிர மேட்டில் ஒரு நீண்ட ரேகை உற்பத்தியாகி செவ்வாய் மேட்டின் வழியாகச் சென்று சூரிய ரேகையைப் பிளந்து சென்றால் அந்த வயதில் கலகம், கஷ்டம் மற்றும் நஷ்டம் உண்டாகும்.

 சூரிய ரேகை ஒரே சீராக இல்லாமல் இருந்தால் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் இலாபத்தையும், நஷ்டத்தையும் மாற்றி மாற்றி சந்திப்பார்கள்.

 சூரிய ரேகை பிளவுப்பட்டிருந்தால் அவருடைய செல்வம், புகழ் போன்றவை பாதிக்கப்படும். இது மிகப்பெரிய அபாயத்தையும் குறிக்கும்.

 இந்த ரேகை நேர்கோடாக இல்லாமல், வளைந்தும் பிளவுப்பட்டும், முறுக்கலாகவும் இருந்தால் இவர்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி அடைவார்கள்.

 சனி ரேகையிலிருந்து ஒரு ரேகை சூரிய ரேகையில் வந்து குறுக்கிட்டால் இவருடைய வெற்றிக்கு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இறுதியில் தோல்வியே கிடைக்கும்.

 சூரிய ரேகையில் தீவுகள் இருப்பது மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமின்றி சூரிய ரேகை பலவீனமாக சிறு சிறு ரேகைகளால் உருவானதாக இருந்தால் இவர்கள் அறிவாளிகளைப் போல் நடந்து கொள்வார்கள். பேச்சு, நடை, உடை பாவனைகளில் மேதைகளைப் போல நடந்து கொள்வார்கள்.

 மேலும், இவர்கள் பிறரை ஏமாற்றுவதுடன் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறவர்கள்.

 வறுமையில் வாடுகிறவர்களுடைய கைகளில், இந்த ரேகை பலவீனமாயும், தீவுகளுடன் கூடியதாயும் அத்துடன் கையில் உள்ள இதர, மேடுகளிலும், விதிரேகையிலும் தீவுகளும், கரும்புள்ளிகளும் காணப்படும். செவ்வாய் மேட்டிலும் பல பெருக்கல் குறிகள் இருக்கும்.

 இந்த ரேகை குறுக்கும் - நெடுக்குமாய் வளைந்திருந்து இருதய ரேகை மிக மெல்லியதாக இருந்தால் இவர்கள் நேர்மையும், நாணயமும் இல்லாதவர்களாய் இருப்பார்கள்.

 இந்த ரேகை ஒரு பெருக்கல் குறியில் முடிவடைந்திருந்தால், அவர்கள் செல்வத்தை இழந்து துன்பத்தை அனுபவிப்பார்கள்.

இந்த ரேகை இரண்டு கிளைகளாகப் பிரிந்து முடிந்தால் இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியோடு முடிவடையும். வயதான காலத்தில் நிம்மதியாக வாழ்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக