ஆன்லைன் மூலம் சம்பாத்தியம் என்பது இப்போது
டிரெண்டாகி கொண்டிருக்கிறது. 1000 ரூபாயை லட்சமாக மாற்றிய நபர், இதுபோன்ற
செய்திகளை நாம் அவ்வப்போது கடந்து கொண்டே தான் வருகிறோம்.
ஆன்லைன்
சம்பாத்தியத்தில் கவனம் தேவை
ஆன்லைனில் பணம் சம்பாத்தியம் என்பதில்
கவனம் என்பது மிக முக்கியம். சதுரங்க வேட்டை படம் பார்த்திருப்போம் அதில் உள்ள ஒரு
வசனம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒருத்தன ஏமாற்றனும்னு முடிவு பண்ணிட்டா
முதல்ல அவன் ஆசைய தூண்டனும். இந்த வசனத்தையே கொள்கையாக கொண்டு பலரும்
காய்நகர்த்துகிறார்கள்.
ஆன்லைன்
மோசடி என்றால் என்ன
அது என்ன ஆன்லைன் மோசடி என்று கேள்வி
வரலாம். பணம் கையில் வழங்காமல் ஆன்லைன் மூலம் நடக்கும் அனைத்தும் ஆன்லைன் மோசடி
தான். சார் நாங்க மெயின் பிரான்ச்ல இருந்து பேசுறோம் உங்க கார்டு மேலே இருக்க
நம்பர் சொல்லுங்கோ என்று ஒரு கால் வந்திருக்கும் அல்லது இதுபோன்ற கால் வந்ததை
கேள்வி பட்டிருப்போம்.
லாவகமாக
பணம் திருடும் கும்பல்
இதன்மூலம் அப்படியே விவரம்
தெரியாதவர்களிடம் ஓடிபி வரைக்கும் வாங்கி மொத்த பணத்தையும் எடுத்துவிடுவார்கள்.
அதேபோல் வங்கி அக்கவுண்ட் ஹேக் செய்து பணத்தை நமக்கே தெரியாமல் ஹேக்கர்கள்
திருடுவார்கள். அதுமட்டுமின்றி முகம் தெரியாத நபர்கள் கால் செய்து வெளிநாட்டு
வேலை, பயிற்சி மையம் என பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி லாவகமாக தங்களின் பணத்தை
திருடுவார்கள்.
சைபர்
பிரிவு போலீஸாரே விசாரிப்பார்கள்
இது அனைத்தும் புகாராக பதியும்
பட்சத்தில் சைபர் பிரிவில் தான் சேரும். அதேபோல் தான இங்கு ஒரு நபர் ஆசை வார்த்தை
கூறி வாட்ஸ் ஆப் ஒரு குரூப்-ல் இருந்து லட்சக் கணக்கில் பணம் பார்த்துள்ளார். இந்த
செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
புரோகிதர்
பணி செய்பவர் மணிகண்டன்
சேலம் காடையாம்பட்டியில் வசித்து
வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் புரோகிதர் பணி செய்து வந்தார். இவர் தன்
தொழிலைச் சார்ந்து லாவகமாக ஒரு வாட்ஸ் ஆப் குழு ஒன்று ஆரம்பித்துள்ளார். அந்த
குழுவில் அர்ச்சனை செய்வது குறித்து பாடம் கற்றுத் தருவதாகவும். அதற்கு முறையான
சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சான்றிதழ்
தருவதாக ரூ.55,000
இவரது ஆசை வார்த்தையை நம்பி தருமபுரி
மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கிறார்.
ஆனால் மணிகண்டன் முருகேசனுக்கு பல மாதங்களாக சான்றிதழ் கொடுக்காமல் ஏமாற்றி
வந்துள்ளார். இதையடுத்து முருகேசன் மணிகண்டனை நேரில் சென்று கேட்டுள்ளார்.
புரோகிதர்
மீது காவல்நிலையத்தில் புகார்
அப்போது மணிகண்டன் சான்றிதழ் தராமல்
மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் மீது காவல்நிலையத்தில் முருகேசன்
புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் மணிகண்டனை காவல்நிலையம் அழைத்து வந்து
விசாரணை நடத்தினர்.
பல
இளைஞரிடம் லட்சக் கணக்கில் மோசடி
அப்போது தான் மணிகண்டன் இதேபோல் கூறி
பல இளைஞர்களிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும்
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகம் தெரியாத நபரிடம் எந்த
ஒரு விஷயத்துக்காகவும் தங்களின் விவரங்களையோ அல்லது பணத்தை செலுத்த வேண்டாம் என
அறிவுறுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக