>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

    லூப்ஸ் ஆண்களின் விந்தணுக்களை அழிக்குமா? உண்மை என்ன?

    லூப்ஸ் விந்தணுக்களை அழிக்குமா? முதலாவதாக, லூப்ஸ் என்பது லூப்ரிகன்ட்/உயவுப்பொருட்களே தவிர வேறெதுவும் இல்லை. இவை யோனியில் ஏற்படும் வறட்சியைக் குறைக்க பயன்படும் பொருட்களாகும்.
    லூப்களைப் பயன்படுத்துவதால், உடலுறவின் போது யோனியில் ஏற்படும் சிறு கிழிசல்களின் அபாயம் குறையும். மற்றும், இன்று யோனியில் ஏற்படும் வறட்சியைக் குறைக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.
    தற்போது பல தம்பதிகள் உடலுறவின் போது முழு இன்பத்தை எளிதில் அனுபவிப்பதற்கு லூப்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் அனைத்து லூப்களும் விந்தணுக்களுக்கு பாதுகாப்பானதா? 
    லூப்கள் விந்தணுக்களை அழிக்காதா? இக்கட்டுரையில் லூப்கள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.குறிப்பு: லூப்கள் ஒன்றும் கருத்தடை பொருட்கள் அல்ல. லூப்களால் கருத்தரிப்பதைத் தடுக்க முடியாது. இருப்பினும், இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புக்களை பாதிக்கும்.
    லூப்ஸ் விந்தணுக்களை அழிக்குமா?
     
    குறிப்பிட்ட வகையான லூப்களின் பயன்பாடு விந்தணுக்களின் நீந்தும் திறன் மற்றும் உருவ அமைப்பையும் பாதிக்கும். இது எப்படி கருத்தரிப்பதற்கான வாய்ப்பை பாதிக்கிறது என்று யோசிக்கிறீர்களா? லூப்களால் விந்தணுக்கள் எவ்வாறு நகரும் அல்லது தோற்றமளிக்கும் என்பதை மாற்றக்கூடும். இதனால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புக்கள் பாதிக்கப்படலாம்.
    லூப்கள் விந்தணுக்களை எவ்வாறு பாதிக்கின்றன?
    ஒரு சிறிய ஆய்வில், குறிப்பிட்ட சில லூப்கள் (உயவுப் பொருட்கள்) விந்தணுக்களின் செயல்பாட்டை தெளிவாக பாதிப்பது தெரிய வந்தது. நல்லெண்ணெய் கூட கருவுறுதலை பாதிப்பதாக கூறப்படுகிறது. இப்படி பெரும்பாலான லூப்கள் விந்தணுக்களின் நீந்தும் திறனைப் பாதிப்பதால், இது கருத்தரிப்பதற்கு பெரும் தடையை ஏற்படுத்துகிறது.
    அனைத்து லூப்களும் விந்தணுக்களை பாதிக்குமா?
    இதற்கு லூப்களில் உள்ள உட்பொருட்களைத் தான் குறை கூற வேண்டும். ஏனெனில் சில லூப்களில் உள்ள கெமிக்கல்கள், யோனியில் உள்ள pH அளவை மாற்றுகின்றன. இதனால் இவை விந்தணுக்கள் மற்றும் அதன் இயக்கம் ஆகியவற்றை மறைமுகமாக பாதிக்கிறது. மேலும் தற்போது கடைகளில் விற்கப்படும் பல லூப்கள் விந்தணுக்களுக்கு தீங்கு விளைவிப்பவையாக உள்ளது என சுகாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.
    தம்பதிகளுக்கு இது தெரியாதா?
    புதிதாக திருமணமான தம்பதிகளில் கிட்டத்தட்ட 40% பேர் (உடனடியாக குழந்தைகளை விரும்பும்), லூப்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை இழக்கக்கூடும் என்ற உண்மை தெரியாது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும் குழந்தைகளுக்காகத் திட்டமிடாத தம்பதிகளில் பெரும்பாலானோர் இன்னும் லூப்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
    பாதுகாப்பான லூப்கள் என்றால் என்ன?
    கடுகு எண்ணெய், கனோலா எண்ணெய் மற்றும் பேபி ஆயில் போன்றவை மற்ற லூப்களுடன் ஒப்பிடும் போது பாதுகாப்பானவை என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இவை ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அழற்சியின் அபாயங்களை உயர்த்தக்கூடும்.
    முடிவு
    லூப்கள் யோனியில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கவும், எளிதான ஊடுருவலுக்கு லூப்கள் உதவுகின்றன என்றாலும், நீங்கள் கருத்தரிக்க முயற்சிப்பவராயின், லூப்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது. மேலும், உங்களுக்கு லூப்கள் தேவைப்பட்டால், மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் சரியான லூப்களைப் பயன்படுத்துங்கள். இதனால் லூப்களால் கருத்தரிப்பதற்கு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக