Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! 48எம்பி கேம்.! 5000எம்ஏஎச் பேட்டரி.!


 விவோ Z6 5ஜி
விவோ நிறுவனம் தனது விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5ஜி ஆதரவு, 48எம்பி கேம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
விவோ Z6 5ஜி
விவோ Z6 5ஜி சாதனம் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1080 x 2080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6ஜிபி/8ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மறறும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் கருப்பு, சில்வர், நீலம் போன்ற நிறங்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 756ஜி
விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போனில் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 756ஜி சிப்செட் உடன் அட்ரினோ 620ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்
ஆண்ட்ராய்டு 10
விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போனில் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 756ஜி சிப்செட் உடன் அட்ரினோ 620ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்பேர் மாடல்.
48எம்பி பிரைமரி கேமரா
விவோ Z6 5ஜி சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா 10 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு என பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
44வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 44வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
விவோ Z6 5ஜி சாதனத்தில் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, புளூடூத் வி 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2198யுவான (இந்திய மதிப்பில் ரூ.22,524)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!