>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 12 டிசம்பர், 2019

    வித்தியாசமான கடை... இரண்டே இரண்டு விதிமுறை... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    இது எப்படி இருக்கு?

    நிரூபர் : பால் வியாபாரம் பண்ணி குறுகிய காலத்துல பெரிய லட்சாதிபதியா ஆகிட்டீங்க... உங்க தொழில் ரகசியம் என்ன சார்?
    முருகேசன் : நாலே நாலு பாயிண்ட்தான் சார்.
    1. மாட்டுக்கு நல்ல பச்சை புல்லு கொடுக்கணும்...
    2. விடியற்காலையிலேயே பாலை கறந்திடணும்...
    3. பாலில் நாலுக்கு ஒரு பங்கு தண்ணி ஊத்திக்கலாம்...
    4. இதையெல்லாம்விட பாலை கறக்கும்போது மாட்டுக்கு சொந்தக்காரங்க கண்ணுல அகப்பட்டுடக்கூடாது..
    நிரூபர் : 😵😵
    ----------------------------------------------------------------------------------------------
    இது உண்மையா?
    ஒரு ஊரில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது... அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகள் என்று போர்டு இருந்தது...

    அது என்னன்னா...!

    1. கடைக்கு ஒரு தடவைதான் வர முடியும்.

    2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கும்... ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களின் தகுதிகள் மேல போக போக அதிகமாகி கொண்டே போகும்.

    ஒரு தளத்தில் இருந்து மேலே சென்றுவிட்டால் மறுபடியும் கீழே வர முடியாது. அப்படியே வெளியேதான் போக முடியும்.

    இதையெல்லாம் படித்த ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு சென்றார்....

    முதல் தளத்தில் இருந்த அறிக்கை பலகையில் முதல் தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இது அடிப்படை தகுதி என்று நினைத்து அடுத்த தளத்திற்கு செல்ல முடிவு செய்து இரண்டாம் தளத்திற்கு சென்றார்.

    இரண்டாம் தளத்தில் இருந்த அறிக்கை பலகையில் இத்தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளின் மேல் அன்பு செலுத்துபவர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

    இதுவும் அடிப்படை தகுதி என்று நினைத்து மூன்றாவது தளத்திற்கு செல்ல முடிவு செய்து மூன்றாவது தளத்திற்கு சென்றார்.

    மூன்றாம் தளத்தில் இருந்த அறிக்கை பலகையில் இத்தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளின் மேல் அன்பு செலுத்துபவர்கள், அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த பெண்மணி வசீகரமானவர்கள் என்று இருந்ததைப் பார்த்ததும் இந்த தளத்திலேயே இத்தனை தகுதிகள் இருக்கிறதே... இன்னும் மேலே செல்ல செல்ல இன்னும் எத்தனை தகுதிகள் இருக்கும்? என்று நினைத்து அடுத்த தளமான நான்காவது தளத்திற்கு சென்றார்.

    நான்காவது தளத்தில் இருந்த அறிக்கை பலகையில் இத்தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளின் மேல் அன்பு செலுத்துபவர்கள், அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். மேலும், வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இதை விட வேறு என்ன வேண்டும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே? கடவுளே... மேலே என்ன இருக்கிறது என்று தெரிந்தே ஆக வேண்டும் என்று நினைத்து அடுத்த தளத்திற்கு சென்றார்.

    ஐந்தாவது தளத்தில் இருந்த அறிக்கை பலகையில் இத்தளத்தில் இருக்கும் கணவான்கள் வேலை உள்ளவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், குழந்தைகளின் மேல் அன்பு செலுத்துபவர்கள், வசீகரமானவர்கள், வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள் மற்றும் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

    அவ்வளவுதான் அந்த பெண்மணியால் முடியல... சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் மேலும் ஒரு தளம் மீதி இருக்கே... அங்க என்ன இருக்கிறது என்று பார்க்காமல் எப்படி முடிவு எடுப்பது? என நினைத்து அடுத்த தளத்திற்கு சென்றாள்.

    ஆறாவது தளத்தில் இருந்த அறிக்கை பலகையில் இந்த தளத்தில் கணவான்கள் யாரும் இல்லை... வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது... இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான். எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி... பார்த்து சூதானமாக கீழே படிகளில் இறங்கவும் என்று எழுதப்பட்டிருந்தது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக