சனி, 23 மே, 2020

கடவுளே, என்னிடம் பேச மாட்டாயா?... படித்ததில் பிடித்தது - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்.!!

போலீஸ் : நீ எங்க தங்கியிருக்க?
சீனு : எங்க அப்பா, அம்மா கூட...
போலீஸ் : உங்க அப்பா, அம்மா எங்க தங்கியிருக்காங்க?
சீனு : என் கூடதான் தங்கியிருக்காங்க...
போலீஸ் : நீங்க எல்லோரும் எங்க தங்கியிருக்கீங்க?
சீனு : நாங்க எல்லோரும் ஒன்னாதான் தங்கியிருக்கோம்...
போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு?
சீனு : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.
போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?
சீனு : சொன்னா நம்ப மாட்டீங்க...
போலீஸ் : பரவால்ல... சொல்லு...
சீனு : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு...
போலீஸ் : 😩😩
-----------------------------------------------------------------------
கணவன் : இன்னைக்கு ஒரு வெள்ளை நாய்க்கு சாப்பாடு வெச்சியா?
மனைவி : ஆமாங்க... எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?
கணவன் : அந்த நாய் தெரு முனையில செத்து கெடக்குது...
மனைவி : 😬😬
-----------------------------------------------------------------------
கடவுள்... படித்ததில் பிடித்தது...!!

கடவுளே, என்னிடம் பேச மாட்டாயா? என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவியது. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.

'கடவுளே, என்னிடம் நீ பேச மாட்டாயா?" என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை.

'கடவுளே உன்னை நான் உடனடியாக பார்க்க வேண்டும்," என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டு பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை.

'கடவுளே, எனக்கு ஒரு அதிசயத்தை காட்டு," என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை.

'கடவுளே, நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்," என்று கூவினான். அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான்.

கடவுள் நம்மை சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில் இருக்கிறார். எனவே அந்த அருட்கொடையை தவற விட்டுவிடாதீர்கள். ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர்பார்க்கும் வடிவில் வரமாட்டார். வேறு ஏதேனும் ரூபத்தில் கட்டாயம் வருவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்